பேர்லயே அண்ணாவ வச்சிகிட்டு அண்ணாதுரையை அண்ணாமலை இப்படி விமர்சிக்கலாமா.. ஜெயக்குமார் மீண்டும் கண்டனம்
சென்னை: பெயரிலேயே அண்ணா என வைத்துள்ள அண்ணாமலை இப்படியெல்லாம் அண்ணாவை பற்றி விமர்சனம் செய்யக் கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பெரியார் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: பெயரிலேயே அண்ணாவை அண்ணாமலை வைத்திருக்கும் போது அண்ணா குறித்து அவதூறு பேசகூடாது.

ஏற்கெனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து இப்படித்தான் அண்ணாமலை அவதூறு கருத்து பேசியிருந்து கண்டனத்துக்குள்ளானார். அதற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டார். தற்போது அண்ணாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அண்ணாமலை பேசி இருக்கிறார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயக்குார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் அண்ணாதுரை தற்போது இல்லை என்றாலும் உலகத் தமிழர்களாக போற்றப்படுபவர். அவரை கொச்சைப்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அண்ணாமலை கூறியது போல் ஒரு சம்பவம் நடக்கவே இல்லை.
முத்துராமலிங்கத் தேவரும் அண்ணாதுரையும் நெருங்கிய நண்பர்கள், அதுமட்டுமல்லாமல் முத்துராமலிங்கத் தேவரை நினைவுக்கூறும் விதமாக எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆட்சி காலங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முத்துராமலிங்க தேவர் மீது மிகப்பெரிய மதிப்பு கொண்ட கட்சி அதிமுக. அண்ணாதுரைக்கும் அவர் மீது மதிப்பு அதிகம்.
அப்படியிருக்க அண்ணாமலை எந்த புத்தகத்தில் படித்தார், எங்கு படித்தார் என தெரியவில்லை. திடீரென வந்து அண்ணாதுரையை தவறாக பேசினால் அதை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலையின் பேச்சுக்காக நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவிக்கிறோம். அண்ணாமலையும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். மீண்டும் இப்படி அவர் பேசினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
அப்படி அண்ணாமலை என்ன பேசினார்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், " 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 10 நாட்கள் ஒரு தமிழ் மாநாட்டின் 4ஆம் நாளன்று அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்த அண்ணாதுரை பார்வதி தேவியை விமர்சித்திருந்தார். அடுத்த நாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பார்வதி தேவியை பேசியது யார் என கேள்வி எழுப்பினார்.
எல்லாரும் நெளிந்தனர். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருந்தார்கள். அவரால் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை பார்வதி தேவி குறித்து கடவுளை நம்ப மறுப்போர் பேசினால் ரத்த அபிஷேகம் நடக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார் அண்ணாதுரை. இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே ஆங்கில் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேட்டி அளித்த அண்ணாமலை, ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு சென்ற முதல்வர் என மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications