ஸ்டாலினுக்கு பாட்டு டெடிகேட் பண்ண சொன்னா.. சந்திரபாபு பாடலை சொல்றாரே ஜெயக்குமார்!
சென்னை: ஸ்டாலினின் செயல்பாடுகள் ஆண்டவன் கட்டளையில் வரும் சிரிப்பு வருது சிரிப்பு வருது பாடல் போல இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
நிருபர்கள் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு இன்முகத்துடன் பதில் அளிப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். உச்சபட்ச பிரச்சினையாகவே இருந்தாலும் யாரையும் கீழ்த்தரமாக பேசாத அரசியல் பண்பாடு உடையவர்.
மீனவர்கள் நலனுக்காக பாடுபட்ட முன்னாள் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

திமுக அரசு
கே: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு குறித்து உங்கள் கருத்து என்ன
ப:500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள். பால் விலையை குறைத்தார்கள், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 1500 தருவதாக அறிவித்தார்களே, அதெல்லாம் கொடுத்தார்களா?. திமுகவினர் 500 வாக்குறுதிகளை கொடுத்தார்களே, அதை கட்டாயம் அவர்கள் ஆட்சி காலம் முடிவதற்குள் நிறைவேற்றுவோம் என ஏதாவது உறுதிமொழியாவது கொடுத்தார்களா?கொரோனா காலத்தில் ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் அதிமுக அரசு.

வித்தியாசம்
கே: ஒரு ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கும், ஒரு மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிறார்களே
ப: நீங்கள் கேட்பது சரிதான். ஆனால் அதிகாரிகள் அதே தானே, அமெரிக்காவில் இருக்கும் அதிகாரிகளா இப்போது வந்துவிட்டார்கள். எங்கள் ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தானே இப்பவும் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளை வேலை வாங்குவதில்தான் திறமை இருக்கிறது.

ஸ்டாலின்
கே: முன்னாள் முதல்வர் கொரோனா வார்டுக்கெல்லாம் செல்லவில்லை. ஆனால் ஸ்டாலின் கோவையில் கொரோனா வார்டுக்கு சென்றுள்ளாரே
ப: அவர் எத்தனை தூரத்திலிருந்து நோயாளிகளை பார்த்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் போன இடம் எப்படிப்பட்டது என்பதும் சமூகவலைதளங்களில் வைரலாச்சு. இவர் கொரோனா நோயாளியை பார்த்தாரா, இல்லை யாரை பார்த்தாருனு யாருக்கு தெரியும்? நான் அதற்குள் போக விரும்பவில்லை. அரசாங்கம் நன்றாக செய்தால் நாங்கள் அவர்களை வாழ்த்துவோம். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எதிரிக் கட்சியாக இருந்தார்கள், நாங்கள் அப்படியில்லை.

குழுதான்
கே: நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்தார்கள். ஆனால் இப்போது ஒரு குழுவை மட்டுமே அமைத்துள்ளார்கள். இதுகுறித்து உங்கள் கருத்து
ப: இதெல்லாம் ஏமாற்று வித்தை. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லாரும் பொய் சொல்லியுள்ளார்கள். குழுவை போட்டு கண்துடைப்பு வேலையில் ஈடுபடுகிறார்கள். பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாக சொன்னார்கள், இன்னும் குறைக்கவில்லையே, மத்திய அரசு விலையை குறைக்கவில்லை என்கிறார்கள். ஏன் வாக்குறுதி கூறும் போது இது அவர்களுக்கு தெரியவில்லையா? வாக்குறுதிகளை போலியாக கொடுத்து வாக்கு வாங்கிவிட்டார்கள். 500 வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற முடியாது.

காவிரி
கே: மேகதாட்டு அணை விவகாரத்தில் உங்கள் ஆலோசனை என்ன?
ப: காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்டவைகளுக்கான உரிமையை எங்கள் பாதுகாத்தது. அந்த வகையில் எந்த உரிமையையும் நாம் விட்டு கொடுக்கக் கூடாது. 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு இப்போது கச்சத்தீவை மீட்போம் என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதாவாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் திமுக மனுதாரராக சேர்ந்ததா?

சுருக்கமாக...
கே: மேகதாட்டு அணை விவகாரத்தில் உங்கள் ஆலோசனை என்ன?
ப: காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்டவைகளுக்கான உரிமையை எங்கள் பாதுகாத்தது. அந்த வகையில் எந்த உரிமையையும் நாம் விட்டு கொடுக்கக் கூடாது. 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு இப்போது கச்சத்தீவை மீட்போம் என தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். கச்சத்தீவு விவகாரத்தில் ஜெயலலிதாவாவது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் திமுக மனுதாரராக சேர்ந்ததா?
சந்திரபாபு பாடல்
கே: ஸ்டாலினுக்கு ஒரு பாட்டு டெடிகேட் செய்யுங்கள்
ப: மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு
கீழே இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு என்ற சந்திரபாபு பாடிய பாடல்தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications