துரதிருஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம்தான்.. 6 இடங்களில் வெடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? ஜெயக்குமார்
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் என்பது ஒட்டுமொத்த உளவுத் துறையின் தோல்வியே ஆகும் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின 115 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது முன்னாள் அமைச்சரான டி ஜெயக்குமார், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தேசியம் தெய்வீகம்
அப்போது அவர் கூறுகையில், தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற கொள்கையோடு இன்றும் அனைவரின் மனதில் வாழும் தேவர் பெருமாகனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் புகழஞ்சலி செலுத்தினோம். தேவர் பார்க்காத சிறையே கிடையாது. பிரண்மனை கள்ளர் எதிரான கடுமையான சட்டத்திற்கு எதிராக போராடினார்.

முக்குலத்தோர்
முக்குலத்தோர் அன்பில் சிறந்த மக்கள். கள்ளர் மறவர் அகமுடையார் ஒரே குடையின் கீழ் வர காரணமானவர் அம்மா தான். எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது பெரிய பிரச்னை இல்லை. திமுக அரசாங்கம் அமையும் போதெல்லாம் வெடிகுண்டு, வன்முறை தீவிரவாத கலாச்சார சர்வ சாதாரணமாக தலை தூக்கும்.

6 இடங்களில் குண்டு வைக்க சதி
வரும்முன் காப்போம் என்ற வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும். 6 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இந்த விவகாரம் துரதிஷ்டத்தில் ஒரு அதிர்ஷ்டமாக போய்விட்டது. ஒரே இடத்தில் கார் சிலிண்டர் வெடித்துவிட்டது. உளவுத்துறையின் தோல்வியே இதற்கு காரணம்.

உளவுத் துறை தோல்வி
ஆரம்பகட்ட முதலே அரசு இதை தடுத்திருக்க வேண்டும். திமுக ஆட்சி எப்போது வந்தால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும். அதிமுக ஆட்சியில் வன்முறை, வகுப்புவாத,துப்பாக்கி கலாச்சாரம் கிடையாது. திமுக ஆட்சியில் இவை சாதாரணமாக நடக்கும் காரியமாகத் தான் இதை பார்க்க முடியும். மாநில அரசின் சட்ட & ஒழுங்கு யாரிடம் உள்ளது. ஒட்டுமொத்த உளவுத் துறையின் தோல்வி தான் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications