குறுக்கே இந்த ஜெயக்குமார் வந்தா.. "அதிமுகவில் சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது.." அடித்து சொன்ன டிஜெ
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு யாரை நியமித்தாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் சார்பில் அபிநயா களம் காண்கிறார். அது போல் பாஜக போட்டியிடாமல் கூட்டணி கட்சியான பாமக போட்டியிடும் என அறிவித்துவிட்டது. இதனால் பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் போட்டியிடுகிறார்.

இதையடுத்து அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அதிமுகவோ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என கூறி புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இது கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு தோல்வி பயம், அதனால்தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என திமுக விமர்சித்திருந்தது. மேலிடத்திலிருந்து வந்த உத்தரவால் அதிமுக போட்டியிடவில்லை என காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்திருந்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு கண்டனம் தெரிவித்திருந்தது. அது போல் நேற்றைய தினம் சசிகலா செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அவர் அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. என் பின்னால் தொண்டர்களும், மக்களும் இருக்கிறார்கள். அதனால் 2026ல் அதிமுக ஆட்சியை தனிப்பெரும்பான்மையுடன் அமைப்போம்.
நான் எப்போதும் அதிகம் பேச மாட்டேன். முக்கியமான நேரத்தில் தான் குரல் கொடுப்பேன். அந்த சமயம் இப்போது வந்துவிட்டது. அதனால், இனி அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன். பட்டிதொட்டி எல்லாம் சென்று மக்களை சந்திக்க உள்ளேன்.
திமுகவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காக்க வேண்டும் என்றால் நாங்கள் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். அதனை நன்கு புரிந்தவர் என்பதால் நான் அவசரப்படவில்லை. எனக்கு ஒரு கண் அதிமுக என்றால், இன்னொரு கண் தமிழக மக்கள். இடைத்தேர்தலை புறக்கணித்தது இந்த சூழலில் சரியில்லை. பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2015 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம்.
இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளார்கள். இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் என்றாவது வன்முறை நடந்துள்ளதா?
விக்கிரவாண்டியில்தான் முழு அரசு இயந்திரமும் செயல்படும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. பாஜக தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தால் அது சரியான வாதம். ஆனால் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு வாக்கு சசவீதம் அதிகரித்ததாக அண்ணாமலை கூறுகிறார்.
எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்காது. லோக்சபா தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொன்னவர் காணாமல் போயுள்ளார். அதிமுகவுக்கென பாரம்பரிய வாக்குகள் கிடைக்கும். அது எப்போதும் திமுகவுக்கு போகாது.
தமிழக பாஜகவுக்கு அண்ணாமலையை நீக்கிவிட்டு யாரை போட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. தமிழிசையை பொதுவெளியில் அமித்ஷா அவமானப்படுத்தியிருக்கக் கூடாது. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அவருக்கு ரீ என்ட்ரியும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications