சிங்கம் இல்லாத காடு... ஜெயலலிதா இல்லாத அதிமுக- போயஸ் கார்டன் பூங்குன்றன்
சென்னை: சிங்கம் இல்லாத காட்டை போல், ஜெயலலிதா இல்லாத அதிமுக உள்ளது என போயஸ் கார்டன் பூங்குன்றன் கருத்து பதிவிட்டுள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அவரது உதவியாளராக போயஸ் கார்டனில் பணியாற்றியவர் தான் இந்த பூங்குன்றன். ஜெயலலிதாவின் கடைசி காலம் வரை அவரது நன்மதிப்பை பெற்ற நபர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், ஜெயலலிதா இருந்தபோது நடைபெற்ற பொதுக்குழு பற்றிய சுவராஸ்யமான சில நிகழ்வுகளை அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பிரமிக்க வைக்கும்
அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்டவுடன் தீர்மானம் எழுத குழு அமைக்கப்பட்டு, தீர்மானத்திற்கான குறிப்புகளை அந்தக் குழு தன்னிடம் வழங்கும் எனக் கூறியுள்ளார். அதை தொகுத்து ஜெயலலிதாவிடம் வழங்கும் போது தனக்கும், தீர்மானம் எழுதிய குழுவிற்கும் பயம் தொற்றிக்கொள்ளும் எனவும், ஒன்றுவிடாமல் அவர் படித்து பார்த்து தவறுகளை சுட்டிக்காட்டுவார் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் நினைவாற்றல் தங்களை பிரமிக்க வைக்கும் என்றும் பூங்குன்றம் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியம்
மேலும், பொதுகுழுவுக்கான மண்டபத்தை முன் பதிவு செய்வது, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான உணவு மெனுவை தயார் செய்வது, நிகழ்ச்சி நிரல் என அனைத்தையும் பார்த்து பார்த்து அவரே முழு அக்கறையுடன் செய்வது பார்ப்போரை வியக்க வைக்கும் எனக் கூறியுள்ளார்.

உணவுக்கு கவனம்
பொதுக்குழுவுக்கு வரும் வெளிமாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மன நிறைவோடு சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என நினைத்தவர் ஜெயலலிதா என்றும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவுக்காக அவர் எழுதி தரும் மெனுவை பார்த்தால் மலைப்பு ஏற்பட்டு விடும் எனத் தெரிவித்துள்ளார் பூங்குன்றன்.

விசாரணை
பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அது நடைபெற்று முடியும் வரை தனக்கு இதயத்துடிப்பு அதிகரித்து விடும் எனக் கூறியிருக்கிறார் பூங்குன்றன். மேலும், பொதுக்குழுவுக்கு வெளியூரில் இருந்து சென்னை வரும் உறுப்பினர்கள் பாதுகாப்பாக ஊர் போய் சேர வேண்டும் என நினைத்தவர் ஜெயலலிதா எனவும், வீட்டிற்கு வந்தாலும் இண்டர்காம் மூலம் அழைத்து இது தொடர்பாக தன்னிடம் விசாரித்துக்கொள்வார் என்றும் பூங்குன்றன் தனது நினைவலைகளை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications