அம்மா தலைமை தாங்கி நடத்தி வைத்த கல்யாணம்! ரவீந்திரநாத்துக்கு புத்திமதி! செல்போன் சுவிட்ச் ஆஃப்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் புத்திமதி சொல்லும் படலம் நடைபெற்று வருகிறது.
ஒரு கட்டத்தில் நாலாபுறமும் இருந்து அட்வைஸ் அழைப்புகள் வந்ததால், இப்போது தனது செல்போனையே சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டார் ஓ.பி.ரவீந்திரநாத். அவர் தான் இப்படி என்றால், அவரது உதவியாளர் அதற்கு மேல் உள்ளார். அவரும் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துக் கொண்டாராம்.

இதனிடையே ஜெயலலிதா தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தான் ரவீந்திரநாத்தின் திருமணம் நடைபெற்றது. இதனால் அம்மா நடத்தி வைத்த கல்யாணத்தை இப்படித்தான் கொச்சைப்படுத்துவியா என ரவீந்திரநாத்துக்கு செண்டிமெண்டான கேள்விகளும் குடும்பத்தரப்பில் இருந்து எழுப்பப்பட்டிருக்கின்றன.
ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள போதும், அவரது மனைவி ஆனந்தி இன்னும் பெரியகுளத்தில் உள்ள தனது கணவர் இல்லத்தில் தான் இருந்து வருகிறார். இது பற்றி ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு மிக மிக நெருங்கிய நபர் ஒருவரிடம் நாம் பேசினோம், அப்போது அவர் கூறியதாவது, ''மது போதையில் இது போன்று செய்திருப்பார் என்று நினைக்கிறேன், மூன்று பிள்ளைகளாவிட்டது, மகன் +2 படிக்கிறான், மகள் வயதுக்கு வந்துவிட்டது, இனிமேல் என்ன டைவர்ஸ் கேட்குது, ஊருக்கு வந்தால் பேசி எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.
''நாங்களே தினமும் 10 பஞ்சாயத்து பேசுவோம், எங்க குடும்பத்தில் இப்படி என்றால் நாங்க எப்படி விடுவோம். ரவி ஊருக்கு வந்தால் எல்லாத்தையும் சரியாக்கிவிடுவோம்.'' என்று நம்பிக்கை பொங்க பேசினார்.












Click it and Unblock the Notifications