Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vaithilingam: ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர்.. சசிகலா குடும்பத்துக்கு நெருக்கம்.. யார் இந்த வைத்திலிங்கம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ. பன்னீர் செல்வம் அணியின் முக்கிய தூணாக இருந்தவருமான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார். தனது எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்த வைத்திலிங்கம், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை ஜனவரி 21 (புதன்கிழமை) சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வைத்திலிங்கம் யார் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

Vaithilingam

முன்னாள் தொழில்துறை அமைச்சர் வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதியிலிருந்து சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் வைத்திலிங்கம். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார். 2016ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வைத்திலிங்கம் தோல்வி அடைந்தார். எனினும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்

இதனைத் தொடர்ந்து 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வைத்திலிங்கம் எம்.எல்.ஏவாக உள்ளார். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்த வைத்திலிங்கம், அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்ற ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இடையே அதிகார யுத்தம் நடைபெற்ற போது ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்தார்.

Vaithilingam

பொதுக்குழுவில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக பேசிவிட்டு வெளிநடப்பு செய்தவர் வைத்திலிங்கம். அப்போதில் இருந்து ஓ.பி.எஸ்.சின் வலதுகரம் போல வைத்திலிங்கம் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகவும் வைத்திலிங்கம் விளங்கினார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் நெருக்கம்

அதிமுகவில் கிளைச் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர் என அடுத்தடுத்து பதவிகள் இவரை தேடி வந்தது. சசிகலாவின் சகோதரர் திவாகரனுடன் ஏற்பட்ட நெருக்கம் வைத்திலிங்கத்திற்கு அதிமுகவில் அதிரடி வளர்ச்சியை கொடுத்தது.

2001 ஆம் ஆண்டு ஒரத்தநாடு ஒன்றிய செயலாளராக இருந்த வைத்திலிங்கத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதில் வென்று எம்.எல்.ஏ ஆனார். முதல் வாய்ப்பிலேயே அவருக்கு அமைச்சர் பொறுப்பும் கிடைத்தது. இடையில் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டாலும் சில மாதங்களில் அவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா வழங்கினார்.

ஐவர் அணியில் வைத்திலிங்கம்

அதிமுகவில் தென்மண்டல பொறுப்பாளர், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். டெல்டாவில் ஒன் மேன் ஆர்மியாக வலம் வந்தார் வைத்திலிங்கம். சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்டாலும், ஜெயலலிதா சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து நீக்கிய போது, அவர்களுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறி புருவம் உயர்த்த வைத்தார்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போது கட்சி பொறுப்புகளை கவனிக்க ஐவர் அணி உருவாக்கப்பட்டது. அந்த ஐவர் அணியில் வைத்திலிங்கம் இருந்தார். ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பிய பிறகும் ஐவர் அணிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அணியில் கடைசி வரை இருந்தவர் வைத்திலிங்கம்தான்.

தோல்வி அடைந்தாலும் பொறுப்பு கொடுத்த ஜெயலலிதா

2016ல் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ராஜ்யசபா பொறுப்பை அவருக்கு ஜெயலலிதா வழங்கினார். அதற்கு பின்னால் இருந்தது சசிகலா என்று சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு சசிகலாவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய வைத்திலிங்கம்தான் அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கப்படுவார் என்று ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தின் போது பொதுக்குழுவில் அறிவித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்தார் வைத்திலிங்கம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+