சசிகலா பற்றி மீண்டும் பேச்சு எடுத்த உதயநிதி ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபத்தில் சசிகலா மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது என காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சார பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் எனும் தேர்தல் பிரச்சாரத்தையொட்டி மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சார பயணமாக இன்று காஞ்சிபுரத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி உள்ளார்.
அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் காந்தி ரோடு தேரடி பகுதியில் பொது மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மருத்துவமனையில் சசிகலா
அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ஓ.பி.எஸ்சும் - இ.பி.எஸ்சும் தமிழகத்திற்கு இதுவரை ஏதும் செய்யவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பல கோடி மதிப்பில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகும் நாளில் திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதாவின் சமாதியை திறந்து வைத்தார். ஆனால் சசிகலா அன்றைய தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டார்.

மண்டபம் மூடல்
ஆனால் பெங்களூரில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு சென்று விடுவார் மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே நேற்று இரவோடு இரவாக திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர்கள் உங்களிடம் வாக்கு கேட்க வரும்போது ஜெயலலிதா எப்படி இருந்தார் என நீங்கள் அவர்களிடம் கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது

எடப்பாடியை தேர்வு செய்யவில்லை
சென்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வராக மறைந்த ஜெயலலிதாவிற்கு தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நான் படிப்படியாக தான் முன்னேறி வந்தேன் என்று சொல்கிறார். ஆனால் அவர் சசிகலா காலில் விழுந்து தான் முதலமைச்சராக வந்தார். எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை.

நீட் ரத்து செய்யப்படும்
இந்தியாவிலே நான்கு முறை ஊழல் வழக்கிற்கு சிறை சென்ற ஒரே முதலமைச்சர் என்றால் அது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான் . மோடியின் பேச்சை கேட்டு வேறு வழியில்லாமல் நீட் தேர்வை கொண்டு வந்து திணித்தனர். அதனால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. வருடத்திற்கு நான்கு மாணவர்கள் நீட் தேர்வினால் இறந்து வருகிறார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வார் என தெரிவித்தார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
அரசியலுக்கு வாய்யா.. கலைஞர் அழைத்தும் போகாத பாரதிராஜா! ஜெயலலிதாவுக்கும் நோ! கடைசி வரை கலைஞர் தான்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications