ரூ.9 கோடி வரி பாக்கியை செலுத்தாவிட்டால்.. ஜெயலலிதா சொத்துகள் ஏலம்.. வருமான வரித்துறை எச்சரிக்கை
சென்னை: ரூ.9 கோடி வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. 2026 ஜன.31 அன்று தேதிப்படி வட்டியுடன் சேர்த்து 9.17 கோடி வரி பாக்கி உள்ளது என்றும், வரி பாக்கியில் தவணை முறையில் ரூ.1.12 கோடி வரி செலுத்தியுள்ளனர் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
வருமான வரி நோட்டீசை எதிர்த்து ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளான ஜெ. தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை இந்த பதில் மனுவை அளித்துள்ளது.

ஜெ. தீபா, தீபக் வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு ஐடி துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெ. தீபாவின் சகோதரர் தீபக்கும் இணைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சரியான தொகையை தெரிவித்தால்
அப்போது, வருமான வரித் துறை சரியான தொகையைக் குறிப்பிடவில்லை என்ற வாதம் ஜெ. தீபா தரப்பில் முன்வைக்கப்பட்டது. வருமான வரிப் பாக்கி 36 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சரியான தொகையை தெரிவித்தால், வரி நிலுவையை செலுத்த தயாராக இருக்கிறோம் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வருமான வரி வசூல் நடவடிக்கையை 2 வாரங்கள் நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ரூ. 9.17 கோடி வரி பாக்கி உள்ளது
அப்போது, வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், 2026 ஜன.31 அன்று தேதிப்படி வட்டியுடன் சேர்த்து ரூ. 9.17 கோடி வரி பாக்கி உள்ளது. வரி பாக்கியை தவணை முறையில் ரூ.1.12 கோடி வரி செலுத்தியுள்ளனர் என்றும் வருமான வரித்துறை கூறியது. வருமான வரித்துறை பதிலை அடுத்து வழக்கின் விசாரணை பிப்.18 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெ தீபா அறிக்கை
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலலிதா தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், அஇஅதிமுக-வின் உச்சபட்ச தலைவராகவும் இருந்தவர். எனவே, அவரைப் பற்றிய பத்திரிகைகளில் வரும் எந்தவொரு விஷயமும், குறிப்பாக நானும் என் சகோதரர் ஜெ. தீபக்கும் முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திகள், உண்மையில் தவறானவையாகவோ அல்லது பொய்யானவையாகவோ, புனையப்பட்டவையாகவோ இருந்தால், அது எங்கள் குடும்ப நற்பெயருக்கு ஏற்பட்ட அவமானமாகவும், பாதிப்பாகவும் கருதப்படும். எனவே, செய்தி ஊடகங்கள் எங்கள் சட்டப் பிரதிநிதிகளிடமிருந்து சரியான தகவல்களைப் பெற்று, உண்மைகளின் அடிப்படையிலும், துல்லியமாகவும் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காலஞ்சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை அவரது சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் வசூலிக்கப்படும் என்று தமிழ் ஊடகங்களில் உள்ள செய்தி சேனல்களால் 05.02.2026 அன்று பரப்பப்பட்ட செய்தி தவறானது என்பதைப் பதிவு செய்வதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
நாங்கள் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற முறையில் எங்கள் அத்தையின் வழக்குகளை நீதிமன்றத்தில் நடத்தி வருகிறோம். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இத்தகைய விஷயங்கள் உண்மைகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட வேண்டும்; தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் பரபரப்பான தலைப்புச் செய்திகளாக வெளியிடப்படக்கூடாது.
இது குடும்பத்திற்கும் எங்கள் உரிமைக்குரிய சொத்துக்களுக்கும் ஏற்பட்ட அவமானம் மற்றும் பாதிப்பு மட்டுமல்ல, ஜெயலலிதா பற்றி பரபரப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செய்தியும், தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தேர்தல் அரசியலுக்குச் சாதகமாகவே பார்க்கப்படும். வருமான வரிப் பொறுப்பு தொடர்பான இந்த வழக்கு தற்போது மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணையின்போது, நீதிமன்றம், வருமான வரித் துறைக்கு, கூறப்படும் வரி பாக்கியின் கணக்கீடுகளுடன் ஒரு விரிவான கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு திட்டவட்டமாக உத்தரவிட்டது.
இன்றுவரை, வருமான வரித் துறையால் எந்தவொரு இறுதி வரிப் பொறுப்பும் நிர்ணயிக்கப்படவில்லை. செலுத்த வேண்டிய தொகை என எந்தவொரு குறிப்பிட்ட தொகையும் உறுதிப்படுத்தப்படவோ அல்லது தெரிவிக்கப்படவோ இல்லை. மீட்பு அல்லது சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பான எந்தவொரு கூற்றும் முன்கூட்டியானது மற்றும் தற்போது நடைபெற்று வரும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு முரணானது. செய்தி சேனல்களால் வெளியிடப்பட்டபடி, நீதிமன்றம் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை, அல்லது எந்தவொரு பார்வையையும் வெளிப்படுத்தவில்லை என்பது மேலும் தெளிவுபடுத்தப்படுகிறது.
என் சார்பில், எனது நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வழக்கறிஞர் எம். சத்ய குமார் மாண்புமிகு நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். மேற்கூறியவற்றின் அடிப்படையில், சொத்துக்களை ஏலம் விடுவதன் மூலம் நிலுவைத் தொகைகள் வசூலிக்கப்படும் என்று அறிக்கை வெளியிடுவது தவறானது, யூகத்தின் அடிப்படையிலானது, மற்றும் தீர்ப்புக்காக நிலுவையில் உள்ள விஷயங்களை முடிவான உண்மைகளாக முன்வைக்கக் கூடாது என்ற நிறுவப்பட்ட கொள்கையை மீறுவதாகும். இந்த வழக்கு தீர்ப்புக்காக நிலுவையில் இருப்பதால், இது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவறாக வழிநடத்தக்கூடும்.
ஜெயலலிதா தொடர்பான, நீதிமன்றத்தின் தீவிர பரிசீலனையில் உள்ள எந்தவொரு சட்ட விஷயங்களும், தவறாக வழிநடத்தக்கூடிய மற்றும் அதிமுக-வின் முன்னாள் தலைவரைப் பற்றி தமிழக மக்களுக்குத் தவறான எண்ணங்களை ஏற்படுத்தக்கூடிய துல்லியமற்ற உண்மைகளுடன் முன்வைக்கப்படக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தவும், பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டுவரவும், தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள இந்த விஷயம் குறித்து நான் இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications