ரத்தத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை.. கராத்தேவில் சாதனைகளுக்கு சளைக்காதவர்.. யார் இந்த ஷிகான் ஹுசைனி
சென்னை: ரத்த புற்றுநோய் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஷிகான் ஹுசைனி நள்ளிரவு காலாமனார். காரேத்தே மற்றும் வில்வித்தையில் பல்வேறு சாதனைகளை செய்த ஷிகான் ஹுசைனி யார் என்ற விவரங்களை பார்க்கலாம்.
1990 களில் தனியார் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பலருக்கும் அறியப்பட்ட முகமாக மாறியவர் ஷிகான் ஹுசைனி. அதேபோல, கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நடிகர் விஜய்யின் பத்ரி படத்தில் பாக்சிங் கோச்சராக நடித்தார். நடிகர் விஜய்க்கு குத்துசண்டை பயிற்சியாளராக நடித்து அசத்தி இருப்பார்.

ரத்தத்தில் ஜெயலலிதா படம், சிலையை வரைந்தவர்
ஹுசைனி சில படங்களில் நடித்து இருந்தாலும் பத்ரி படத்தில் அவர் நடித்த இந்த கதாப்பாத்திரம் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தது. மூன்று முறை உலக கராத்தே போட்டியில் வென்றுள்ளார். அரசியலில் ஜெயலலிதாவுக்கு மிக தீவிர ஆதரவாளராக அறியப்பட்டார். ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்க்க ஹூசனி செய்த செயல்கள் ரொம்பவே வித்தியாசமானது.
அதாவது, சாலையில் தன்னுடைய கையில் 101 கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார். இது ஜெயலலிதாவின் கவனத்திற்கு போனதும் அவர் மிகவும் அதிர்ந்து போனதாக சொல்லப்படுவதுண்டு. ஹுசைனியை நேரில் அழைத்து அவருக்கு அறிவுரையும் கூறினார். அதேபோல, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, அவர் விடுதலை ஆக வேண்டும் என வேண்டி தன்னைத் தானே சிலுவையில் அறைந்து பிரார்த்தனை செய்தார்.
ஹுசைனியை கண்டித்த ஜெயலலிதா
பார்ப்பவர்களை அதிர வைக்கும் வகையில் ஹூசானியின் இந்த செயல் அமைந்து இருந்தது. அது மட்டும் இன்றி ரத்தத்தால் ஜெயலலிதாவின் சிலையை செய்தது மேலும் சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியது. ஜெயலலிதாவின் சிலையினை உருவாக்குவதற்காக 8 ஆண்டுகள் உடலில் இருந்து 24 பாட்டில் ரத்தம் எடுத்து அதைப் பாதுகாத்து வந்ததாகவும் அத்துடன் வில்வித்தை வீரர்கள், வீராங்கனைகள் 32 பேரும் ரத்தம் கொடுத்ததாகவும் கூறினார்.
ஆண்டுக்கு 100 மில்லி லிட்டர் வீதம், ஜெயலலிதாவின் 65வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் எனது 6½ லிட்டர் ரத்தத்தையும், வில்வித்தை மாணவ, மாணவியரின் 4½ லிட்டர் ரத்தத்தையும் சேர்த்து மொத்தம் 11 லிட்டர் ரத்தத்தை உறைய வைத்து ஜெயலலிதா சிலையை உருவாக்கியதாக ஹுசைனி பேட்டி ஒன்றில் கூறினார். ஹுசைனியின் இது போன்ற செயல்களால் ஜெயலலிதா கடும் அதிருப்திக்கு உள்ளானதாகவும், பல முறை கண்டித்துள்ளதாகவும் ஷிஹான் ஹுசைனி பேட்டி ஒன்றில் கூறினார்.
நெறியாளர் முகத்தில் தாக்கினார்
கடந்த 2016-ஆம் ஆண்டு, தமிழக வில்வித்தை சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அங்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஹுசைனி, நேர்காணல் எடுத்தவர் வேண்டுகோளை ஏற்று அவருக்கு பயிற்சி கொடுக்கும் போது அவரை லேசாக முகத்தில் தாக்கினார். அப்போது நெறியாளர் வலியால் துடித்தார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் அப்போது டிரெண்ட் ஆனது.
அவ்வப்போது தனது அதிரடியான மற்றும் வித்தியாசமான செயல்கள் மூலம் கவனம் பெறும் ஷிஹான் உசேனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தரமணியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பில் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications