ஜெயலலிதா வாங்கிய சத்தியம்? திமுக தந்த மன உளைச்சல்.. விந்தியா எமோஷனல் பக்கம்!
சென்னை: தனிப்பட்ட வாழ்க்கையில் ஜெயலலிதா எந்தளவுக்கு உணவுப் பிரியராக இருந்தார் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நடிகை விந்தியா பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த காலகட்டத்தில் அதிமுகவின் அதிரடி பேச்சாளராக இருந்தவர் விந்தியா. அவர் ஆந்திராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு அவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரும் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்.

அடுத்ததாக அம்மா கேரக்டரில் நடிப்பார் என எதிர்பார்த்த காலத்தில் திடீரென்று அதிமுகவில் இணைந்தார். அதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு சரியாக தமிழ்பேசவே வராது. அவர் எப்படி அரசியலில் போய் வெற்றி பெறப் போகிறார் என்று பலரும் நினைத்தபோது, ஸ்டார் பேச்சாளராக மாற்றினார். டைமிங், ரைமிங் என்று மக்களை ஈர்க்கும்படி பேசினார். ஊடகங்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. திடீரென்று ஜெயலலிதா மறைந்தபோது சசிகலா அணிக்குப் போவதா? எடப்பாடி அணிக்குப் போவதா என்ற குழப்பத்தில் இருந்த இவர், ஜெயலலிதாவைத் தவிர வேறு ஒருவரை தலைவியாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை என்று மவுனமாக இருந்தார். பிறகு அதிமுகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஜெயலலிதாவின் கனவு அதுதான் என ரீ என்ட்ரி கொடுத்தார்.
இவரது கஷ்டமான காலகட்டத்தில் ஜெயலலிதா எப்படி உறுதுணையாக நின்றார் என்பது பற்றி விந்தியா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "எனக்கு 17 வயது இருக்கும்போதே நிறைய சாதித்தேன். நடிகையானேன். முதல் படத்திலேயே நான் கொண்டாடப்பட்டேன். வாழ்க்கையில் நிறைய கிடைத்தது. அதன்பிறகு 2008இல் வாழ்க்கையில் மிகப்பெரிய வலி வந்தது. நிறைய சரிவுகளைச் சந்தித்தேன். என் வாழ்க்கையில் இருண்டப் பக்கங்களாக இந்தக் காலகட்டத்தைத்தான் சொல்வேன். உடல் பிரச்சினைகள். அதனால் குண்டாகிவிட்டேன். இனிமேல் ஹீரோயினாக நடிக்க முடியாது என்ற நிலை. 17 வயதிலேயே சினிமாவுக்கு நடிக்க வந்ததால், அதிகம் படிக்கவில்லை. இனிமேல் என்ன செய்ய போகிறோம் என்ற கவலை அதிகம் இருந்தது.
அதிமுகவில் 2006இல் இணைந்தேன். ஜெயலலிதாவை சென்னையில் சந்திக்க முடியவில்லை. விழுப்புரத்தில் நானும் சிம்ரனும் சந்தித்து கட்சியில் சேர்ந்தோம். அந்தத் தேர்தலில் அதிமுக தோற்றுவிட்டது. அடுத்து போயஸ்கார்டனில் ஜெயலலிதாவைப் போய் பார்த்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. நான் ஒரு படம் தயாரிக்கப் போவதாக சொன்னேன். கூடவே கூடாது என்று அவர் சொன்னார். என்னிடம் சத்தியம் கூட வாங்கினார். ஜெயலலிதா பேச்சை மதித்து நான் படம் எடுப்பதையே விட்டுவிட்டேன்.
அந்தக் காலகட்டத்தில் நான் அதிக பிரச்சினையில் இருந்தேன். அது அவருக்கு தெரியும். 'யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே. உன் வேலையை மட்டும் பார். நான் இருக்கிறேன்' என்றார். அந்த ஒரு வார்த்தை தான் என்னை மாற்றியது. அப்போது எனக்கு மேடைகளில் பேசத் தெரியாது. அதைக் கற்றுக் கொள்ளவில்லை. ஒரு நடிகையாக இரட்டை விரல்களை மட்டுமே காட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்தேன். பெரிய வரவேற்பு இல்லை. 2009இல் ஜெயலலிதா பிரச்சாரத்திற்குப் போக சொன்னார். 'நான் ஆர்வம் இல்லை. மன அழுத்தத்தில் இருக்கிறேன்' என்று சொல்லி வாய்ப்பை மறுத்தேன். அதற்கு ஜெயலலிதா, 'போய் மக்களைப் பார், எல்லாம் சரியாகிவிடும்' என்றார்.
அப்போது திமுக என்னை குறிவைத்து தாக்கியது. தரக்குறைவாக விமர்சித்தார்கள். அந்த வெறியில் தமிழ்க் கற்றுக் கொண்டேன். என் சொந்தப் பிரச்சினைகளை மறக்க ஆரம்பித்தேன். மகிழ்ச்சி அதிகமானது. 2010க்கு பிறகு தமிழ் பேச கற்றுக் கொண்டேன். அதிமுகவைவிட திமுகவை பற்றி நிறைய தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய படித்தேன். 2011இல் தமிழ்நாட்டில் நான் போகாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இறங்கி பிரச்சாரம் செய்தேன்.

அந்தக் காலத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தது ஜெயலலிதாதான். அவரே தினம் போன் செய்து, இன்று ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி தரவேண்டும். நாளை கனிமொழி பேச்சுக்கு பலதிலடி கொடு என்று நேரடியாக அறிவுரை தருவார். அவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. அதேபோல சொன்ன விசயத்தை மட்டும் செய்தால் போதும். அவர் சொல்லாததை செய்தால் அவருக்கு கோபம் வந்துவிடும். 2014இல் மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தலைமைச் செயலகம் வர சொன்னார். போனேன். அனைவரின் முன்பாக என்னைப் பார்த்து, 'உன் பணி மிகச் சிறப்பானது. நீ என்னுடைய ஃபேவரைட் பேச்சாளர்' என்று பாராட்டினார். அதை என்னால் மறக்கவே முடியாது" என்கிறார்.
தொடர்ந்து பேசிய விந்தியா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு உணவு பிரியர் என்பதை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார், "அவர் அரசியலை தாண்டி நல்ல உணவுப் பிரியர். அவருக்கு எந்தக் கடையில் என்ன ஸ்வீட் நல்லா இருக்கும் என்பது அத்துபடி. ஒவ்வொரு ஹோட்டலிலும் எந்த டிஷ் ஸ்பெஷல் என்பதை தெரிந்து வைத்து சரியாக சொல்வார். அவரைப் போல உணவை ருசித்து சாப்பிட்டவர்கள் யாருமே இல்லை. நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிடுவார். காலையிலேயே தனக்கு விருப்பமான உணவு என்ன வேண்டும் என்பதை லிஸ்ட் போட்டு எழுதி கொடுத்துவிடுவார். சாம்பார் என்றால் உருளைக் கிழங்கு பொறியல் இருக்கவேண்டும். ஒருநாளைக்கு ஃபில்டர் காபி எத்தனை முறை கொடுத்தாலும் குடிப்பார்" என்று பேசி இருக்கிறார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications