தூக்கி விட்ட அப்பா.. ஏற்றி விட்ட அண்ணன்! இப்போ கண்டுக்க மாட்டேங்கிறாரு ரவி மோகன்! ‘அவங்க’ காரணமா?
சென்னை: ஆர்த்தியை பிரிந்த பிறகு மீண்டும் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் ஜெயம் ரவி என்ற ரவி மோகன். தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இரு படங்களை அவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது சினிமா வாழ்க்கைக்கு அடித்தளம் போட்ட அப்பா மோகனையும் அண்ணன் ராஜாவையும் கலந்தாலோசிக்காமல், அவர் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், இதனால் தான் அவர்கள் ஸ்டுடியோ திறப்பு விழாவில் கூட கலந்து கொள்ளவில்லை என கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகரான ரவி மோகன் (ஜெயம் ரவி), ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தனக்கு 40 லட்சம் ரூபாய் மாதம் வழங்க வேண்டுமென ஆர்த்தி கூறியிருந்தார்.

இது குறித்து பதில் அளிக்க ரவி மோகனுக்கு அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தன்னை குறித்து அறிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரவி மோகன் தொடர்ந்து வழக்கில் இரு தரப்பும் அறிக்கை தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவர் தொடர்பான செய்திகளை வெளியிடவும் தடை விதித்தது.
இதற்கு இடையே சினிமாவில் தனது கேரியரை தக்க வைக்க வேண்டும் என சீரியஸாக பணியாற்றி வருகிறார் ரவி மோகன். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெயரிலேயே ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
மேலும் முதல் படத்தை தயாரிக்கும் அவர் தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். ப்ரோகோட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் ரவியுடன் எஸ்கே சூர்யாவும் நடிக்கிறார். இதுமட்டுமல்லாது யோகி பாபு நடிக்கும் படத்தையும் ரவி மோகன் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ரவி மோகன் ஸ்டுடியோ ஆரம்பித்தபோதும், லோகோ வெளியிட்ட போதும் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போதும், அவரது தந்தையும் அண்ணனும் கலந்து கொள்ளவில்லை. ஜெயம் படத்தின் ஜெயம் ரவியை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியது அவரது அப்பா எடிட்டர் மோகன் தான். அந்த படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவும் அடுத்தடுத்து பல படங்களை தனது தம்பியை வைத்து தான் பண்ணி இருந்தார்.
வேலாயுதம் உள்ளிட்ட சில படங்களை தவிர ராஜாவின் அனைத்து படங்களின் ஹீரோவும் ஜெயம் ரவி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மனைவியை பிரிந்த பிறகு தனது குடும்பத்தினருடன் ரவி மோகன் நெருக்கம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போதும் லோகோ வெளியிட்ட போதும் தனது தந்தையையும் அண்ணனையும் ரவி மோகன் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.ஆர்த்தியை பிரிய வேண்டாம் என ரவி மோகனின் குடும்பத்தினர் சொல்லியதாகவும் ஆனால் அதை ரவி மோகன் ஏற்கவில்லை என்கிறார்கள்.
மேலும் ஆர்த்தியை பிரிந்த பிறகு அவர் இசிஆரிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும், பிரபல பாடகி ஒருவருடன் நெருக்கமாக இருப்பதால் குடும்பத்தை புறக்கணிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications