’ப்ளே பாய்’ ரவி மோகன்.. 4 ஹீரோயின்களுடன் டூயட்! கோடி கோடியாய் கொட்டி.. இனி ரூட் கிளியர் தான்!
சென்னை: ஆர்த்தியுடன் பிரிவு ஏற்பட்ட பிறகு மீண்டும் சினிமாவில் சீரியஸாக பணியாற்றி வருகிறார் ரவி மோகன். ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் அவர் ப்ரோகோட் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தில் ரவி மோகனுக்கு நான்கு ஹீரோயின்கள் என்கின்றனர். முதன்முறையாக அதிக ஹீரோயின்களுடன் ரவி மோகன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கு மேலாக வளம் வருபவர் ஜெயம் ரவி என்ற ரவி மோகன். 2003இல் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
ஆனால் 1993 ஆம் ஆண்டு பாவா பவமரிடி என்ற தெலுங்கு படத்தின் மூலமே குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காமல் நல்ல பிள்ளையாக சினிமாத்துறையில் இருந்தவர் ரவி மோகன் என்றால் அது பொய்யில்லை.

தொடர்ந்து ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட ரவி, அவரது மாமியாரின் தயாரிப்பில் சில படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் பிரச்சனையே வந்தது. தொடர்ந்து தனது மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் டாக்சிக் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டிய ரவி மோகன், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜெயம் ரவியின் குற்றச்சாட்டுகளை மறுத்து ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே கெனிஷாவுடன் ஜெயம் ரவிக்கு பழக்கம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவருமே அது தொடர்பாக பேசவில்லை. சர்ச்சை பெரிதானதை அடுத்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என ஜெயம் ரவி கேட்டுக்கொண்டார். இது ஒருபுறம் இருக்க ஐசரி கணேஷ் இல்ல நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, கெனிஷாவுடன் கலந்து கொண்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்த்தி, கெனிஷா, ரவி, அவரது மாமியார் என தொடர்ந்து அறிக்கையை போரில் ஈடுபட்டனர்.
விவகாரம் பெரிதான நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இனி அறிக்கை போரில் ஈடுபட வேண்டாம் என கூறியது. இதை அடுத்து அவர்களது கருத்து மோதல் தற்காலிக முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு இடையே சினிமாவில் தனது கேரியரை தக்க வைக்க வேண்டும் என சீரியஸாக பணியாற்றி வருகிறார் ரவி மோகன். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பெயரிலேயே ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
மேலும் முதல் படத்தை தயாரிக்கும் அவர் தானே ஹீரோவாகவும் நடிக்கிறார். ப்ரோகோட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது லேட்டஸ்டாக அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு நான்கு ஹீரோயின்கள் என சினிமா உலகில் சொல்கின்றனர். குறிப்பாக கயாடு லோகர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதுவரை பல்வேறு கேரக்டர்களின் ரவி மோகன் நடித்திருந்தாலும் பிளேபாய் கேரக்டரில் நடித்ததில்லை. இந்த படத்தில் பிளே பாயாக ரவி மோகன் நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே படத்தில் நான்கு ஹீரோயின்கள் என்கின்றனர். முதல் முறையாக அதிக ஹீரோயின்களுடன் ரவி மோகன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தின் பட்ஜெட்டும் பல கோடி இருக்கும் என்கின்றனர். படத்தில் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications