விஜய் அங்கிள் பாவம்னு சொன்ன திமுக எம்எல்ஏ மகள்கள்! ராஜ்மோகன் பதிலடிக்கு முகம் சுளித்த சபாநாயகர்
சென்னை: விஜய் அங்கிள் பாவம்பா என தனது மகள் சொன்னதாக ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பேசியதற்கு அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த பதிலுக்கு சபாநாயகர் அளித்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் பேசத் தொடங்கினார். அந்த நேரத்தில் அவையில் விஜய் இல்லை.

அப்போது அவர் பட்ஜெட் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் அவர் பேசுகையில், எனது மாணவர் பருவத்தில் இருந்து நான் முதல்வரின் படங்களை விரும்பி பார்ப்பேன். கல்லூரியில் நான் படிக்கும் போது 6 முறை லவ் டுடே படத்தை பார்த்திருக்கேன்.
நான் அவரை நல்ல நடிகராக, ஃபைட்டராக, டான்சராக ரசித்திருக்கிறேன். ஆனால் அவர் முதல்வராக நடிப்பதைதான் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேடையில் பேசுவதை போல் சட்டசபையில் முதல்வர் பேசக் கூடாது.
இந்த அரசு நல்ல பெயரை எடுக்க வேண்டும் என சொல்வதை தவறாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் திட்டங்களுக்கு வைத்த நல்ல பெயர்களை எல்லாம் நீக்கிக் கொண்டிருக்கிறது. நான் சட்டசபைக்கு அவசரமாக கிளம்பி கொண்டிருந்தேன்.
எனது இரு மகள்களும் என்கிட்ட ஏதோ பேசணும்னு கூப்பிட்டாங்க. நானும் நேரமாச்சும்மா விஷயத்தை சொல்லுங்கன்னு சொன்னேன். அதற்கு அவர்கள் இருவரும், விஜய் அங்கிள் பாவம்பா. அவருக்கு ஒன்றும் தெரியுதாப்பா. நீ ஏதாவது ஏடாகூடாமாக பேசி, கேள்வி கேட்காதப்பா என்று என் மகள்கள் சொன்னார்கள் என பேசியிருந்தார்.
இதற்கு துணை சபாநாயகர் கடும் (சபாநாயகர் இடைவேளைக்கு சென்றிருந்தார்) கண்டனங்களை தெரிவித்திருந்தார். அப்போது அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த சபாநாயகர் என்ன நடந்தது என தனது உதவியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்போது திமுகவினர் வசந்தம் ஜாலியா நகைச்சுவையாக சொல்லிவிட்டார், பெருசுபடுத்தாதீர் என்றனர்.
உடனே ராஜ்மோகன், வசந்தம் கார்த்திகேயனை போல் நானும் விளையாட்டாக ஒரு விஷயத்தை சொல்கிறேன். "அன்பு செல்வங்களிடம் போய் சொல்லுங்கள், ஆமாம் முதல்வருக்கு ஏமாற்ற தெரியாது, ஊரை அடித்து உலையில் போடத் தெரியாது" என சொல்லும்படி நகைச்சுவையாக பேரவைத் தலைவரின் வாயிலாக சொல்ல விரும்புகிறேன் என்றார். அப்போது சபாநாயகர் முகத்தை சுளித்தபடி ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். இதையும் திமுகவினர் டிரோல் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
