ஜேசிடி பிரபாகரன் ஹீரோ.. இது மட்டும் நடந்தால் விஜய்க்கு பிள்ளையார் சுழி.. சட்டசபையில் சொதப்பும் தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேசிடி பிரபாகரன்தான் சட்டமன்றத்தின் ஹீரோவாக உள்ளார்.. இந்த சபாநாயகர் மட்டும் இல்லையென்றால் டேபிள் சேர் எல்லாமே உடைந்திருக்கும்.. ரத்தக்களறிவரை சபை சென்றிருக்கும் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்.. அத்துடன் சட்டசபையில் தவெக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ள கோடீஸ்வரன், "காங்கிரஸ் கட்சியில் எம்பிக்கள் இல்லாததால் தவெக கட்சியை இந்தியா கூட்டணியில் இணைக்க முடியாது என்று மாணிக்கம் தாக்கூர் சொல்கிறார்.. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தாமல் விஜய் தரப்பு தங்களை ப்ரோமோட் செய்து கொள்கிறது.

JCD Prabhakar

தவெக அமைச்சர்கள்

நேபாள விவகாரம் மற்றும் கோயம்புத்தூர் மாணவன் அமுதன் கொலை போன்ற முக்கியமான பிரச்சனைகளில் அமைச்சர்கள் உரிய தீர்வையோ ஆறுதலான வார்த்தைகளையோ பேசவில்லை.. காவல்துறை பதிவு செய்த எப்ஐஆரை மட்டுமே படித்துக் காட்டுகிறார்கள். தவெக அமைச்சர்களுக்கு தங்களது இலாகா குறித்தும் மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவைகள் குறித்தும் முழுமையாகத் தெரியவில்லை. உண்மையான பிரச்சனைகளைத் திசைதிருப்பவே பல அமைச்சர்கள் சட்டமன்றத்தில் செயல்படுகிறார்கள்.

சட்டமன்றத்தில் வேலை தெரியாதவர்கள் அமைச்சர்களாக இருப்பதால் தேவையில்லாமல் விவாதங்கள் நீண்டு நேரம் வீணாகிறது. ஒரு பிளம்பருக்கு வேலை தெரிந்தால் சரியாக செய்துவிட்டு சென்றுவிடுவார்.. ஆனால், அனுபவமில்லாதவர்கள் செய்யும் செயல்களால் அவையின் நேரம் நீடிக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சட்டமன்ற விவாதங்களே மக்களிடையே அதிக என்டர்டெயின்மென்ட்டை கொடுக்கிறது.

ஸ்டாண்ட்-அப்-காமெடி

சோஷியல் மீடியாவில் சட்டமன்ற நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அரசியல் கற்றுக்கொள்ள முடியாது. காவேரி பிரச்சனை போன்ற முக்கியமான நீர் மேலாண்மை மற்றும் விவசாயிகளின் கஷ்டங்களைப் பற்றிப் பேசாமல், ஏதோ பொழுதுபோக்கு விஷயங்களைப் போல சட்டமன்றம் நடக்கிறது.

மேட்டூர் அணையின் கொள்ளளவு, காவிரியின் கிளை நதிகள், மேகதாது அணை விவகாரம் மற்றும் அதனால் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது போன்ற ஆக்கப்பூர்வமான நீர் மேலாண்மை விஷயங்களைப் பற்றிப் பேசாமல் ஸ்டாண்ட்-அப் காமெடி போல பேசுகிறார்கள். எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் மற்றும் லாட்டரி போன்ற விவகாரங்கள் இளைஞர்கள் மத்தியில் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறதே தவிர, சரியான அரசியல் விழிப்புணர்வைத் தருவதில்லை.

பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்காருவது

பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்காருவது என்பது போன்ற தேவையற்ற விஷயங்களை சட்டமன்றத்தில் பேசுவதும், பழைய சினிமா பாடல்களைப் பாடி அவையின் நேரத்தை வீணடிப்பதும் நடக்கிறது.

அதேபோல குதிரை பேர அரசியலை நியாயப்படுத்துவது தவறாகும். பொதுமக்கள் சந்திக்கும் மின் கட்டண உயர்வு போன்ற உண்மையான பிரச்சனைகளை பற்றிப் பேசாமல் கவனத்தைத் திசைதிருப்பவே விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

ஹீரோ ஜேசிடி பிரபாகரன்தான்

இந்த சட்டமன்றத்தின் ஹீரோ, ஜேசிடி பிரபாகரன்தான்.. சபாநாயகர் மட்டும் இல்லையென்றால் டேபிள் சேர் எல்லாமே உடைந்திருக்கும்.. ரத்தக்களறிவரை சபை சென்றிருக்கும்..

"ஆளுகின்ற கட்சிக்கு பொறுப்பு அதிகமாக இருக்கும்" என்று அடிக்கடி சபாநாயகர் சுட்டிக்காட்டுகிறார்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் எந்தவித ஆபாசமான பேச்சுக்களுக்கோ சண்டைகளுக்கோ இடம் கொடுக்காமல், ஒவ்வொரு நாளையும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திறம்பட ஓட்டி வருவதால் எதிர்க்கட்சிகளின் பாராட்டையும் சபாநாயகர் பெற்று வருகிறார்.. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான அவருக்குரிய அனுபவமும் எதார்த்தமும்தான் இதற்கு உதவியாக இருக்கிறது..

சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை மாற்றுவது தவெக கட்சியின் அழிவுக்கும் குழப்பங்களுக்கும் தொடக்கமாக அமையும். ஆளுங்கட்சியினர் தான் விதிகளை மீறி அதிக தவறுகளை செய்கிறார்கள்.

ஒருவேளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை மாற்றுகிறார்கள் என்றால், தவெக கட்சியின் அழிவுக்கும் குழப்பங்களுக்கும் அதுவே தொடக்கமாக அமையும்.. விஜய் சாரின் அரசியல் சறுக்கல் அப்போதுமுதல் ஆரம்பமாகும்.. இதுதான் விஜய்க்கு விஜய்யே போட்டுக் கொள்கிற பிள்ளையார் சுழி..

அமைச்சர் கீர்த்தனா, மரிய வில்சன்

அமைச்சர் கீர்த்தனா, மரிய வில்சன் இவர்கள் பேசும்போது ஏதாவது தரவுகள் இருக்கா? சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான மற்றும் ஆக்கப்பூர்வமான தரவுகளுடன் பதிலளிக்காமல் திணறுகிறார்கள்.. ஊழல் மற்றும் நிதி சார்ந்த விவகாரங்களில் 15,000 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது போன்ற கேள்விகளுக்கு ஆதாரங்களைக் கேட்டால் அமைச்சர்கள் சமாளித்து ஓடுகிறார்கள்.. 3 ஃபைல்கள் டேபிளில் இருப்பதாக சொன்னார்களே, இன்னமும் அந்த ஃபைல்கள் தூங்குகிறதா?

தவெக கட்சி உண்மையான அரசியல் என்னவென்று தெரியாமலும், சரியாகப் பேசத் தெரியாத எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு கட்சியை நடத்துகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+