மறக்க முடியாத ஜீவஜோதி.. மன்னிக்க முடியாத படுகொலை.. சபலத்தால் சரிந்து போன சாம்ராஜ்ஜியம்
சரவண பவன் ஓனர் ராஜகோபாலும், ஜீவஜோதியும் பிளாஷ்பேக் இது
Recommended Video

சென்னை: மாநிறம்தான்.. களையான முகம்.. பெரிய அளவில் கவர்ச்சிகரமான கண்கள்.. லட்சணமான தோற்றம்.. இவர்தான் ஜீவஜோதி!
அன்றைய தினங்களில் சினிமாக்களையும், சீரியல்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பத்திரிகைகளில் முக்கிய இடத்தையும் பிடித்தார் ஜீவஜோதி!
ஜீவஜோதியின் தந்தை, சரவணபவன் ஹோட்டலில் மேனேஜராக வேலை பார்த்தவர். இப்படித்தான் ஜீவஜோதியின் குடும்பத்தில் சரவண பவன் ஓனர் ராஜகோபாலுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஜீவஜோதியின் அழகில் மயங்கி விழுந்தார் ராஜகோபால்!

காதலித்தார்
ஏதோ ஒன்றில் ஜீவஜோதியால் ஈர்க்கப்பட்டு விட்டார்! அதற்காகவே அந்த குடும்பத்திற்கு பல உதவிகளை செய்தார் . ஆனால், ஜீவஜோதியோ பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்தார். திருமணமும் செய்துகொண்டார். இது அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ஆசைப்பட்டார்
ஏற்கனவே 2 மனைவிகளை உடைய அண்ணாச்சி, 3-வதாக ஜீவஜோதியை முழுசாக அடைய முயற்சித்தார். இதற்காக கணவர் சாந்தகுமாரை அழைத்து மிரட்டியுள்ளார். ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், சாந்தகுமாரை விலகும்படியும் சொன்னார்.

கொலை செய்யும் எண்ணம்
ஆனால் காதலித்த கணவன் சாந்தகுமாரோ இதற்கெல்லாம் மசியவில்லை. மனைவியை விட்டுத்தர முடியாது என்று துணிந்து அண்ணாச்சி முகத்தை பார்த்து சொன்னார். இதுதான் கொலை செய்யவும் அண்ணாச்சியை தூண்டியது.

கொடைக்கானல்
கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி சாந்தகுமார் கடத்தப்பட்டார். புருஷனை காணவில்லை என்று பதறிபோய் ஜீவஜோதி போலீசில் புகார் தந்தார். போலீசும் தீவிரமாக தேடியலைந்தார்கள். கடைசியில், 5 நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் மலை அடிவாரத்தில் சாந்தகுமாரின் உடலை கண்டெடுத்தனர்.

சித்ரவதைகள்
விசாரணை ஆரம்பமானது.. அப்போது இந்த விவகாரத்தில் ராஜகோபால் சம்பந்தப்பட்டிருக்க மாட்டார் என்றே அனைத்து தரப்பிலும் நம்பப்பட்டது. ஆனால் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு காரில் கடத்தி செல்ல ஐடியா தந்ததே ராஜகோபால்தான் என தெரியவந்தது. காரில் செல்லும்போதே சாந்தகுமார் கழுத்து நெறிக்கப்பட்டது.. கொடைக்கானல் மலை உச்சிக்கு செல்வதற்குள் பல சித்ரவதைகள் வந்து போயின.. அப்போதே பாதி உயிர் போயிற்று.. இறுதியாக உச்சியில் இருந்து தூக்கி வீசப்பட்டார் சாந்தகுமார்.

ஆயுள்
கடைசியில் தமிழகம் முழுக்க நாறிப் போனார். ஓட்டல் வைத்து ஊருக்கே சோறு போட்ட முதலாளி சிறைக்கு சென்று களி தின்றார். ராஜகோபால் மட்டும் அன்று கொல்ல முயற்சிக்காமல் இருந்திருந்தால் இந்த கன்றாவி பின்னணிகள் எல்லாம் கடைசிவரை வெளியவே தெரிந்திருக்காது. ஒட்டுமொத்த பெயரும் கெட்டு போன ராஜகோபால் தன் இறுதி மூச்சுவரை சிறையிலேயே கழிக்கும் நிலைமையும் இன்று ஏற்பட்டுவிட்டது!
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications