மசாஜுக்கு வந்த தொழிலதிபர்.. 2 பெண்களுடன் ஜாலி.. திடீரென புகுந்த நால்வர்.. பிறகு நடந்தது என்ன?
சென்னையில் மசாஜ் சென்டர் நடத்திய 7 பேர் கைது
Recommended Video

சென்னை: வீட்டையே மசாஜ் சென்டராக மாற்றி பலரிடம் பணம் பறித்த 2 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாதவரத்தை சேர்ந்தவர் நிர்மலா. 27 வயதான இவர் தனது கணவனை பிரிந்து வாழ்கிறார். அதனால் ஜீவனத்துக்காக அண்ணநகரில் ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஒரு தொழிலதிபர். கொடுங்கையூரில் வசித்து வருகிறார்.
இவருடன் பழக்கம் கிடைத்ததும் நிர்மலா தன் வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே மசாஜ் சென்டரை நடத்த ஆரம்பித்துவிட்டார். போன வாரம் ஒருநாள், தனக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று தொழிலதிபர் சொல்லவும், தன் வீட்டுக்கு வரும்படி நிர்மலா கூப்பிட்டிருக்கிறார்.

ஜாலியாக இருந்தார்
அதன்படி 2 நாளுக்கு முன்னாடி நிர்மலா வீட்டுக்கு சென்றார். அங்கே இருந்த தனது தோழி ஷீலா, மற்றும் ஆட்டோ டிரைவர் மணிகண்டனை தொழிலதிபருக்கு நிர்மலா அறிமுகம் செய்து வைத்தார். பிறகு நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்திருக்கிறார்.

போலீசில் புகார்
இதனை தொடர்ந்து, திடீரென 4 பேர் கொண்ட ஒரு கும்பல் நிர்மலா வீட்டுக்குள் புகுந்து தொழிலதிபரை கத்தியை காட்டி மிரட்டி 2 சவரன் நகை, 70 ஆயிரம் ரூபாய் என பறித்து கொண்டு தப்பியது. இதனால் தொழிலதிபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். உடனே மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் அளித்தார்.

நிர்மலா செட்டப்
இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நிர்மலா, ஷீலா, ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போதுதான் கொள்ளை கும்பல் நிர்மலாவின் செட்டப் என்று தெரியவந்தது. தொழிலதிபரை மிரட்டி பணத்தை கறந்து 7 பேரும் பங்குபிரித்து கொள்ள பிளான் போட்டிருந்ததும் தெரியவந்தது.

7 பேர் கைது
இதையடுத்து, இவர்கள் மூன்று பேருடன், கார்த்திகேயன், புகழேந்தி, அருண்குமார், லட்சுமணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அனைவரும் இப்படியே நிறைய பேரிடம் பணத்தை ஏமாற்றி பிடுங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து 7 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications