நெட்ஃப்ளிக்ஸ் சந்தா தனியாக தேவையில்லை.. ஜியோ, ஏர்டெல், Vi-ல் இந்த பிளான்கள் சூப்பர்ல..! முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் முக்கியமான படங்கள், சீரிஸ்கள் வெளியாகி வருகின்றன. நெட்ஃப்ளிக்ஸில் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்ச சந்தா கட்டணம் ரூ. 199. அதேசமயம், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தமது ரீசார்ஜ் பிளான்களில் இலவச நெட்ப்ளிக்ஸ் சலுகையை வழங்குகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம். அந்த பிளான்கள் பற்றி இங்கே பார்க்கலாம்!

ஓடிடி தளங்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சினிமா ரசிகர்கள் புதிய திரைப்படங்களை பார்க்கவும், வெப் சீரிஸ்களை பார்க்கவும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ5 உள்ளிட்டவை முன்னணி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களாக இருக்கின்றன.

Airtel Jio recharge mobile

நெட்ஃப்ளிக்ஸ்: முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் முன்னணி நடிகர்களின் முக்கியமான படங்கள் வெளியாகி வருகின்றன. அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'மகாராஜா' நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலும் அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2 அண்மையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. மேலும் பல பிரபலமான சீரிஸ்களும் உள்ளன.

பலரும் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் செய்து வருகின்றனர். ஒரு போனில் மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கும் பேசிக் மொபைல் சப்ஸ்கிரைப் செய்ய நெட்ஃப்ளிக்ஸில் கட்டணம் ரூ. 199. ஆக, மாதாமாதம் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வது போக, நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கும் ரூ. 199 செலுத்த வேண்டி உள்ளது.

இலவச நெட்ஃபிளிக்ஸுடன் கூடிய ப்ரீபெய்டு மொபைல் பிளானை ஏராளமானோர் விரும்புகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுமே தங்கள் ரீசார்ஜ் பிளான்களில் நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனை இலவசமாக அளிக்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ: ஜியோ நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்கு இலவச நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி சலுகையை 2 பிளான்களில் வழங்குகிறது.

ரூ.1,299 பிளான்: அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவுடன் 2 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு (மொத்தம் 168ஜிபி) வழங்குகிறது இந்த பிளான். இதில், 3 மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கும்.

ரூ.1,799 திட்டம்: ரூ.1,299 திட்டத்தில் உள்ள அதே வரம்பற்ற பலன்களுடன் அதாவது, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டட் 5ஜி டேட்டாவுடன் தினசரி 3 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு (மொத்தம் 252ஜிபி) டேட்டாவை வழங்குகிறது. இதனுடன் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவும் இலவசம்.

வோடபோன் ஐடியா: இலவச நெட்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனுடன் இரண்டு பிளான்களை வழங்கி வருகிறது வோடஃபோன் ஐடியா நிறுவனம். எனினும் இலவச 5ஜி டேட்டா சேவை இல்லாதது வோடஃபோன் ஐடியாவின் மிகப்பெரிய குறை.

ரூ.1,198 பிளான்: இந்த பிளானில் 70 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது (மொத்தம் 140ஜிபி). மேலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிட்டட் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை சனி ஞாயிறு நாட்களில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம். இதனுடன் 70 நாட்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவும் இலவசம்.

ரூ.1,599 பிளான்: தினசரி 2.5 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு (மொத்தம் 210ஜிபி) வழங்குகிறது இந்த பிளான். மேலும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்ஸையும் இலவசமாக வழங்குகிறது. மேலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிட்டட் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை சனி ஞாயிறு நாட்களில் கூடுதலாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதனுடன் 84 நாட்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சந்தா இலவசம்.

ஏர்டெல்: முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல், நெட்ஃப்ளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷனுடன் ஒரே ஒரு பிளானை வைத்துள்ளது.

ரூ.1,798 பிளான்: ஜியோவின் ரூ.1,799 திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகளுக்கு நிகராக ஏர்டெல்லின் இந்த பிளானிலும் வழங்கப்படுகிறது. தினசரி 3ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது (மொத்தம் 252ஜிபி), அன்லிமிட்டட் வாய்ஸ் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+