5 சூப்பர் பிளான்கள்.. இலவச ஓடிடி.. கேஷ்பேக்.. 3 மாத வேலிடிட்டி.. அள்ளி அள்ளிக் கொடுக்கும் ஜியோ!
சென்னை: இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தமது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் புதிதாக 5 பிரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி + ஹாட் ஸ்டார், ஜீ5, சோனி லிவ் ஆகிய ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன்களை இலவசமாக வழங்கும் இந்த பிளான்களை பற்றி பார்க்கலாம்.
கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது ஜியோ. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தின. இதனால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை தம் பக்கமே தக்கவைக்க புதிய பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது ஜியோ.

புதிய பிளான்கள் அறிமுகம்: ஜியோ நிறுவனம், 949 ரூபாய், 1028 ரூபாய், 1029 ரூபாய், 1,049 ரூபாய் மற்றும் 1,299 ரூபாய் மதிப்புள்ள 5 புதிய பிரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஐந்து பிளான்களிலுமே 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதோடு, ஓடிடி, ஸ்விகி உள்ளிட்ட ஏராளமான பலன்களும் கிடைக்கும். மேலும், 5ஜி நெட்வொர்க் கிடைக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பயனர்கள், 5G டேட்டாவை அன்லிமிட்டடாக பயன்படுத்தலாம்.
ரூ. 949 டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிளான்: இதன் வேலிடிட்டி 84 நாட்கள். 84 நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால்ஸ். ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4G டேட்டா வீதம் மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB டேட்டா கிடைக்கும். ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 3 மாதங்களுக்கு (90 நாட்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் இலவசமாக கிடைக்கும். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றை அக்சஸ் செய்து கொள்ளலாம்.
ரூ.1028 ஸ்விகி ஒன் லைட் பிளான்: இதன் வேலிடிட்டி 84 நாட்கள். 84 நாட்களுக்கு எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவசமாக வாய்ஸ் கால் பேசலாம். ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4G டேட்டா வீதம் மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB டேட்டா கிடைக்கும். ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேஷ்பேக் & ஸ்விகி லைட்: இதோடு, ஸ்விக்கி ஒன் லைட் அப்ளிகேஷனுக்கான 3 மாத இலவச மெம்பர்ஷிப் கிடைக்கும். இதன் மூளம் ரூபாய் 600 மதிப்புள்ள பலன்களை ஸ்விகி ஆர்டர்களின் போது பெறலாம். அதோடு, 50 ரூபாய் கேஷ்பேக்கும் கிடைக்கும். இந்த 50 ரூபாயை அடுத்த ரீசார்ஜின்போது பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்றவற்றை அக்சஸ் செய்து கொள்ளலாம்.
ரூ.1029 பிரைம் லைட் பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். 84 நாட்களுக்கு எந்தவொரு நெட்வொர்க்குக்கும் இலவசமாக வாய்ஸ் கால் பேசலாம். ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4G டேட்டா வீதம் மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB டேட்டா கிடைக்கும். ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 3 மாதங்களுக்கு இலவசமாக அமேசான் பிரைம் லைட் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். அதோடு, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
ரூ.1049 சோனி லிவ் + ஜீ5 பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். 84 நாட்களுக்கு இலவசமாக வாய்ஸ் கால் பேசலாம். ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4G டேட்டா வீதம் மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB டேட்டா கிடைக்கும். ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 3 மாதங்களுக்கு இலவசமாக சோனி லிவ் (Sony LIV), Zee5 சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். ஜியோடிவி மொபைல் ஆப் வழியாக இதனை பயன்படுத்தலாம். அதோடு, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
ரூ.1,299 நெட்ஃப்ளிக்ஸ் பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். 84 நாட்களுக்கு இலவசமாக வாய்ஸ் கால் பேசலாம். ஒரு நாளைக்கு 100 SMS இலவசம். மேலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி 4G டேட்டா வீதம் மொத்தமாக 84 நாட்களுக்கு 168 GB டேட்டா கிடைக்கும். ஜியோ 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 3 மாதங்களுக்கு இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். அதோடு, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications