ஜியோ வழங்கும் குடியரசு தின அதிரடி ஆஃபர்.. Swiggy, Ajio கூப்பன்கள் இலவசம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை: குடியரசு தின சலுகை ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். 365 நாள் வேலிடிட்டி பிளானில் ஸ்விகி கூப்பன், ஏஜியோ ஸ்பெஷல் ஆஃபர் என ஏராளமான கூடுதல் பலன்களையும் வழங்குகிறது ஜியோ.
இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அவ்வப்போது புதிதாக சலுகைகளுடன் பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில், குடியரசு தினத்தையொட்டி, ஒரு சூப்பரான வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோ.

ஜியோவின் 2,999 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு வருடம். இந்த திட்டத்தில், யூசர்கள் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த பிளானில் தினசரி 2.5 ஜி.பி டேட்டா என ஒட்டுமொத்தமாக 365 நாட்களுக்கு 912.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் பெறுவார்கள்.
தமது குடியரசு தின சலுகையின் ஒரு பகுதியாக வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் பலன்களின் பட்டியலை அறிவித்துள்ளது ஜியோ. ரூபாய் 2,999 ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் பிரபலமான இ- காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் ஃபேஷன் வெப்சைட்ஸ் மற்றும் ஃபுட் டெலிவரி ஆப்களுக்கான தள்ளுபடி கூப்பன்களைப் பெறலாம்.
குடியரசு தினச் சலுகையின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் டிஜிட்டலில் குறிப்பிட்ட பொருட்களை வாங்கும் போது ஜியோ 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.5,000-க்கு மேல் மற்றும் ரூ.10,000க்குள் பொருட்கள் வாங்கினால் இந்த தள்ளுபடியை பெறலாம். இதன் பொருள், ரூ. 1,00,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள கேஜெட்டை வாங்கினால் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கும்.
ஜியோ ரூபாய் 125 மதிப்புள்ள இரண்டு ஸ்விக்கி கூப்பன்களை வழங்குகிறது. ரூ.299க்கு மேல் மதிப்புள்ள ஆர்டர்கள் செய்யும்போது இந்த ஆஃபரை ரிடீம் செய்யலாம். மேலும் இக்ஸிகோ கூப்பனையும் வழங்குகிறது. இது விமான டிக்கெட் விலையை மூன்று டிக்கெட்களுக்கு 1,500, இரண்டு டிக்கெட்களுக்கு ரூ. 1,000 மற்றும் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 500 தள்ளுபடி வழங்குகிறது.
ஜியோவின் குடியரசு தின ஆஃபரில் ஏஜியோ தளத்தில் ரூ.2,499க்கு மேல் ஆடைகள் வாங்கும் போது ரூ.500 மதிப்புள்ள ஏஜியோ தள்ளுபடி கூப்பனை பெறலாம். மேலும், இந்தத் Tira-வில் ரூ. 999க்கு மேல் மதிப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
இந்த ஆஃபர்களை பெற உங்கள் My Jio ஆப் அல்லது ஜியோ வெப்சைட் மூலமாக, ரூ.2999க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். மை ஜியோ ஆப்பில் கூப்பன்கள் கிடைக்கும். அவற்றை காப்பி செய்து, உங்களுக்கு வேண்டிய தளங்களில் பேஸ்ட் செய்து சலுகையை பெறலாம். ஜியோவின் இந்த சலுகை ரீசார்ஜ் திட்டம் ஜனவரி 15 முதல் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications