Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகேஷ் அம்பானி எதை தொட்டாலும் தங்கமாகுது.. வருமான வரி கட்டுவோருக்கு புதிய வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோ ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL) JioFinance ஆப்பில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.. இதன் மூலம் பொதுமக்கள் தங்களே வருமான வரியை எளிதாகத் தாக்கல் செய்ய முடியும். தாங்களாகவே தாக்கல் செய்யும் சேவை வெறும் ₹24-ல் ஆரம்பிக்கிறது. இந்த ஆப்பில் மாத சம்பளம் வாங்குவோர் வருமான வரி தாக்கல் செய்ய (self-service) அல்லது நிபுணரின் உதவியுடன் தாக்கல் செய்ய (expert-assisted) என இரண்டு வழிகள் இருக்கின்றன. நிபுணர்களின் உதவியுடன் தாக்கல் செய்யும் சேவை ₹999-ல் தொடங்குகிறது.

முகேஷ் அம்பானி எதை தொட்டாலும் பொன்னாகிறது.. டெலிகாம் சேவையில் ஜியோ மூலம் டிஜிட்டல் புரட்சியை கொண்டு வந்த அம்பானி, அடுத்தடுத்து செய்தது அசாத்தியமானது. அந்த வழியில் ₹24 போன்ற மலிவு விலையில் வருமான வரி தாக்கல் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் மக்களைக் குறிவைத்து இந்த சேவையைகொண்டு வந்துள்ளார்.

JioFinance Launches Online ITR Filing from Just 24 How to use JioFinance app s new feature

யாரெல்லாம் தாக்கல் செய்கிறார்கள்

இந்தச் சேவை மக்களிடையே பெறும் வரவேற்பை பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இன்றைக்கு கணிசமாக மாத சம்பளம் வாங்குவோர் கண்டிப்பாக வருமான வரிதாக்கல் செய்ய வேண்டியதுள்ளது. 2.5 லட்சம் தொடங்கி 12 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வாங்கினாலும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. எனவே மாதச் சம்பளம் ₹45,000 முதல் ₹60,000 வரை வாங்குபவர்கள், வருமான வரி தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கோ அல்லது மற்ற ஆன்லைன் தளங்களுக்கோ ₹500 முதல் ₹1,000 வரை செலவு செய்ய யோசிப்பது நடக்கிறது.

அரசுக்கு வருவாய்

தரவுகள் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசின் தகவல்களின் படி, 2019-20 நிதியாண்டில் 6 கோடியே 48 லட்சம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். 2023 - 24 நிதியாண்டில் இதில் 8 லட்சத்து 9 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதேபோல் 2020-21 நிதியாண்டில் 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர் வருமான வரி தாக்கல் மூலம் நேரடி வரியாக மத்திய அரசுக்கு கிடைத்தது. அது 2023-24-ல் 12 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.

வருமான வரி தாக்கல்

இந்த ஆண்டு இன்னமும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் வரும் ஆண்டிலும் அதிகமாக இருக்கும். அடுத்த ஆண்டில் சுமார் 10 கோடி பேர் வரை வருமான வரி தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் கணிசமானோர் வருமான வரியை ஜியோ மூலம் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு ₹24 என்பது மிகவும் குறைவான கட்டணம் ஆகும்.

எளிதாக்கும் ஆப்

தற்போதைய நிலையில் வருமான வரி தாக்கல் செய்வது ஒரு சிக்கலான செயல் என்று பலர் கருதுகின்றனர். JioFinance செயலி, படிப்படியான வழிகாட்டல்கள் மூலம் இந்தச் செயல்முறையை மிகவும் எளிமையாக்கி இருக்கிறது.. இதனால், முதன்முறையாகத் தாக்கல் செய்பவர்களும் தயக்கமின்றி இதனைப் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறார்கள்.

ஜியோ பைனான்ஸ் ஆப்பின் முக்கிய நன்மைகள் என்ன

வரித் திட்டமிடல் (Tax Planner)

வரித் திட்டமிடல் வசதி ஜியோ பைனான்ஸ் ஆப்பில் இருக்கிறது எதிர்கால வரிப் பொறுப்புகளை மதிப்பிடவும், வீட்டு வாடகைப் படி (HRA) கணக்கீடு செய்யவும், பழைய மற்றும் புதிய வரி முறைகளை ஒப்பிட்டுப் பார்க்க மாத சம்பளதாரர்களுக்கு உதவும்.

எளிமையான தாக்கல்

அதேபோல் வருமான வரி தாக்கல் செய்யும் நபர்கள், வருமான விவரங்களை உள்ளிடுவது, ஆவணங்களைப் பதிவேற்றுவது, மற்றும் சரியான வரி முறையைத் தேர்ந்தெடுப்பது போன்ற படிநிலைகள் எளிதாக வழிகாட்டப்படுவதாக கூறப்படுகிறது.

நிபுணர் உதவி

ஜியோ நிறுவனம் TaxBuddy நிறுவனத்துடன் இணைந்து நிபுணர் உதவி வசதியையும் உருவாக்கி உள்ளது. இது பிரிவு 80C மற்றும் 80D போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வரி விலக்குகளை வருமான வரிதாரர்கள் தவறவிடாமல் இருக்க உதவுகிறது.

தாக்கல் பின் கண்காணிப்பு

வரி தாக்கல் செய்த பிறகு, பயனர்கள் தங்கள் ரீஃபண்ட் நிலையைச் சரிபார்க்கலாம், மற்றும் வரி தொடர்பான அறிவிப்புகளுக்கு எச்சரிக்கைகளையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஜியோ பைனான்ஸ் நிறுவனம் விளக்கம்

JFSL-ன் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிடேஷ் சேத்தியா இந்த ஆப் தொடர்பாக கூறுகையில், "வரி தாக்கல் செய்வதை எளிமையாக்குவதே எங்கள் நோக்கம். ஏனெனில் இந்த திட்டம் மூலம் வருமான வரி கட்டுவோர் தங்கள் வரிப் பொறுப்புகளை ஆண்டு முழுவதும் சிறப்பாக நிர்வகிக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மற்ற தளங்களில் கட்டணம் அதிகம்

ஜியோ பைனான்ஸ் தவிரமற்ற ஆன்லைன் வரி தாக்கல் தளங்களில், சுய தாக்கல் திட்டங்கள் பொதுவாக ₹199 முதல் ₹499 வரையிலும், நிபுணர் உதவித் திட்டங்கள் ₹799 முதல் ₹2,000 வரையிலும் உள்ளன. ஜியோ ஃபைனான்ஸின் ₹24 என்ற கட்டணம், மற்ற தளங்களை விட மிகக் குறைவானது என்பதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+