அலர்ட்.. அதிகரித்த ஜேஎன்.1 வைரஸ்.. யாரெல்லாம் தமிழகத்தில் மாஸ்க் அணியனும்.. அமைச்சர் முக்கிய அட்வைஸ்
சென்னை: தமிழ்நாட்டில் உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2019 ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு 2020ம் ஆண்டை முற்றிலுமாக கொரோனா வைரஸ் முடக்கிப்போட்டது. கொரோனா வைரஸ் உருமாறி மக்களை தாக்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகினர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. மேலும் கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் நோய் தடுப்பு சக்தி பெற்றனர். இதையடுத்து 2021ல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.
அதன்பிறகு கடந்த 2022, 2023ல் இந்தியாவில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது கொரோனாவின் உருமாறிய ஜேஎன்.1 வைரஸ் தான் காரணமாகும். இந்த வைரஸ் பாதிப்பால் கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது பிற மாநிலங்களிலும் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை என்பது உயர்ந்து கொண்டே வருகிறது.
இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் உருமாறிய ஜேஎன் 1 கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முக்கிய விஷயத்தை தெரிவித்தார். இது பற்றி அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டில் தற்போது ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் புதிய உருமாறிய வைரஸால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்கள் விரைவிலேயே குணமாகி விடுகின்றனர். அதாவது 4 நாட்களில் குணமடைகிறார்கள். இதனால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியமாகும். இதனால் முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications