சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜான் பாண்டியன் ஒரே போடு.. நடையா நடந்தேனே.. "தேவேந்திரன் நரேந்திரன்".. ஆஹா.. மேலிடம் வரை ஒலித்த குரல்

பிரதமர் மோடி குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், பெருமிதம் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரிடம் 100 முறையாவது நடந்திருப்பேன். தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்காக அவர்களிடம் அப்போது சென்றிருந்தேன்.. கடைசிவரை எடப்பாடியும் கொடுக்கவில்லை, ஓபிஎஸ்ஸும் கொடுக்கவில்லை" என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருந்தது.. அதேபோல, பாஜகவும் ஓரிரு இடங்களில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெற்றிருந்தது.. தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்த நேரம் என்பதால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி தந்திருந்தார்.

அதில், "வேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்காக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் நன்றியின் விசுவாசமாக 80% விழுக்காடு இந்த முறை பாஜகவிற்கு வாக்களித்து இருக்கின்றனர்.

திமுகவை பற்றி அப்பவே சொன்னேனே கேட்டீங்களா.. பாஜக இன்று வளர யார் காரணம்.. போட்டுடைத்த ஜான்பாண்டியன்திமுகவை பற்றி அப்பவே சொன்னேனே கேட்டீங்களா.. பாஜக இன்று வளர யார் காரணம்.. போட்டுடைத்த ஜான்பாண்டியன்

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

அதே போல் யார் தேவேந்திர குல மக்களுக்கு நன்மை செய்தாலும், அதற்கு விசுவாசமாக நடப்பது தேவேந்திரகுல வேளாளர்களின் நிலை. அதன் அடிப்படையிலேயே இன்றைக்கு தமிழகத்தில் பிஜேபியின் நிலை உயர்ந்து இருக்கிறது. இதற்கு காரணம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் என்பதை தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் கட்சி என்று சொல்லும்பொழுது எப்படி வெற்றி பெற்றார்கள் என பத்திரிகைகளுக்கெல்லாம் தெரியும். விமர்சனங்களை நிறைய பார்த்திருப்பீர்கள். எந்த அடிப்படையில் வெற்றி பெற்றார்கள், மக்கள் தான் ஓட்டு போட்டார்களா?

 திமுக லிஸ்ட்

திமுக லிஸ்ட்

அவர்களாக ஓட்டு போட்டார்களா? அதிகாரிகள் ஓட்டு போட்டார்களா? என அவர்களுக்கு தான் தெரியும். திமுக 90% வெற்றி பெறுவார்கள் என்று அப்போதே மீடியாக்களில் சொன்னேன். காரணம் ஆளும் கட்சி. அவர்கள் கையில் எல்லாமே இருக்கிறது. அதனால் ஜெயித்து விட்டார்கள்... மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகம். அதை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். நிறைவேற்ற வேண்டும் என்று, கோரிக்கை வைக்கிறேன். திமுக பட்டியல் வெளியேற்றத்தை ஏற்றுக்கொள்ளாது. அண்ணா திமுகவும் ஏற்றுக்கொள்ளாது.

 ஜான்பாண்டியன்

ஜான்பாண்டியன்

இது, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மட்டும் தான் ஏற்றுக்கொள்ளப்படும். எந்த கட்சியும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எங்களுக்காக யாரும் பரிந்துரை செய்வது கிடையாது. ஆதரவும் கொடுக்க முடியாது. ஆதரவு திரட்டும் வண்ணம் மற்ற கட்சிகளின் தலைவர்களை சந்திக்கலாம் என்று இருக்கிறேன். நிச்சயமாக சந்திப்பேன். கோரிக்கை வைப்போம். கொடுத்தால் பார்ப்போம் இல்லாவிட்டால் மத்திய அரசிடம் போராடி பெற்றுக்கொள்வோம் என்று ஜான்பாண்டியன் பேட்டியில் அப்போது கூறியிருந்தார்...

 ஜான் பாண்டியன்

ஜான் பாண்டியன்

இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் ஜான் பாண்டியன் கலந்துகொண்டார். அப்போது ஜான்பாண்டியன் கூட்டத்தில் பேசியபோது, "முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது அவரிடம் 100 முறையாவது நடந்திருப்பேன். தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்காக அவர்களிடம் சென்றிருந்தேன்.. இங்கு சட்டமாக உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்புங்கள் என்று சொன்னேன்... ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.

 தேவேந்திரன் நரேந்திரன்

தேவேந்திரன் நரேந்திரன்

ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து உடனடியாக தேவேந்திர குல வேளாளர் கோப்புகளை அனுப்பு என்கிற கட்டளையின் அடிப்படையில் அனுப்பினார்கள். இவர்களாக முன்வந்து அனுப்பவில்லை... ஓபிஎஸ்ஸூம் கொடுக்கவில்லை. எடப்பாடியும் கொடுக்கவில்லை. மத்திய அரசு கேட்டு வாங்கினார்கள்... வாங்கியதும் மோடி, அரசு விழாவில் அறிவித்தார். "தேவேந்திரன் நரேந்திரன்" மோடி என்று சொன்னார்.. உடனே, பாராளுமன்றத்தில் பேசி அரசாணை வெளியிட்டார்கள்... இதுதான் பெருமை" என்றார் ஜான்பாண்டியன்.

English summary
John Pandian criticized about aiadmk Edapadi palanisamy and OPS in the public meeting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X