ஜான் பாண்டியன் மகளுக்கு எம்.பி.சீட்? யாருடன் கூட்டணி -எந்தச் சின்னத்தில் போட்டி?
சென்னை: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
மருத்துவரான இவர் தனது தந்தை ஜான் பாண்டியனிடம் அரசியல் கற்று கட்சி பணிகளில் இப்போது ஈடுபாடு காட்ட ஆரம்பித்துள்ளார். ஜான் பாண்டியனை பொறுத்தவரை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.

பாஜக அதிமுக கூட்டணி இருந்தவரை அந்தக் கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார் ஜான் பாண்டியன். இப்போது அதிமுகவும், பாஜகவும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருப்பதால் ஜான் பாண்டியன் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே மருத்துவரும், ஜான் பாண்டியனின் மகளுமான வினோலின் நிவேதா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார். தனது தந்தையும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஓபனாக கூறியிருக்கிறார். இதன் மூலம் இரட்டை இலை சின்னத்திலோ அல்லது தாமரை சின்னத்திலோ ஜான் பாண்டியன் மகள் தேர்தலில் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக ஆகிய 2 தரப்பும் ஜான் பாண்டியனை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே ஜெயலலிதா தான் தனக்கு அரசியலில் ரோல் மாடல் என்றும் அவரை போன்று துணிச்சலாக இருக்க வேண்டும் என தாம் எண்ணுவதாக டாக்டர் வினோலின் நிவேதா கூறியுள்ளார்.
அரசியலில் தனது மகனை ஜான் பாண்டியன் முன்னிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மகளை முன்னிறுத்துகிறார். இதுவும் நல்ல விஷயம் தான். பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கால் பதித்து சாதனை புரிந்து வரும் நிலையில் அரசியலிலும் அதிகம் கால் பதிக்க முன்வர வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications