உயிருக்கு ஆபத்து.. கடுமையான இதய நோயுடன் போராடும் 6 வயது சிறுவன்! காப்பாற்ற உடனே உதவுங்கள்
சென்னை: கடுமையான இதய நோயால் போராடிக் கொண்டிருக்கும் 6 வயது சிறுவன் தாஷ்விக்கின் உயிரை காப்பாற்ற இன்றே உதவுங்கள். உங்களின் சிறு உதவி கூட சிறுவனின் உயிர் காக்கும் போராட்டத்தில் பெரிய அளவுக்கு பலன் கொடுக்கும்.
திருச்சி லால்குடியை சேர்ந்தவர் முருகானந்தம். தச்சராக வேலை செய்யும் இவர், ஒரு நாளைக்கு 500 லிருந்து 700 வரை தான் சம்பாதிக்கிறார். குடும்ப கஷ்டம், போதிய வேலை இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் முருகானந்தத்தின் குடும்பம் மற்ற சாமானிய மக்களின் குடும்பத்தை போல வறுமையிலே வளர்ந்து வருகிறது.

என்னதான் வறுமை இருந்தாலும் இவர்களுக்கென இருந்த ஒரே ஆறுதல் குழந்தை தாஷ்விக்தான். கடந்த 2009 ஆம் ஆண்டு பிறந்த இக்குழந்தைக்கு பிறவி இதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. போதிய சிகிச்சை பெற அப்போது முருகானந்தத்திடம் பண வசதி இல்லை. குழந்தை தாஷ்விக் இதயக் குறைபாடு உடன் வளர்ந்து வந்தான். குழந்தைக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்ட போது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்ததில் குழந்தையின் இதய குறைபாடு தீவிரமாக மாறி இருப்பது கண்டறியப்பட்டது.
முருகானந்தத்தின் ஒரே மகிழ்ச்சி தாஷ்விக்தான். ஆனால் அக்குழந்தை கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது முருகானந்தத்தையும் அவரது குடும்பத்தையும் ஒரேடியாக முடக்கியது. ஒரு வழியாக குழந்தைக்கு 2021 ஆம் ஆண்டு முதல் பெரிய இதய அறுவை சிகிச்சை மியாட் மருத்துவமனையில் செய்யப்பட்டது. தற்போது குழந்தை ஆறு வயது சிறுவனாக வளர்ந்து இருக்கிறான்.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில், சிறுவன் தாஷ்விக்குக்கு மீண்டும் இதய பிரச்சினை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தாஷ்விக்கை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். சிறுவன் தற்போது ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.
அறுவை சிகிச்சை மருந்துகள் என அனைத்துக்கும் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. சாதாரண தச்சராக வேலை செய்யும் முருகானந்தத்தால் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது. எனவே சிறுவனின் உயிரை காப்பாற்ற உடனடியாக உதவுங்கள். சிறிய பங்களிப்பு கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications