சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூத்துப்பட்டறையிலிருந்து முளைத்த 2 சூப்பர் நட்சத்திரங்கள்.. பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம்!

Google Oneindia Tamil News

சென்னை: ஜோக்கர் படத்தில் கதாநாயகனாக வரும் குரு சோமசுந்தரமும் கூத்துப்பட்டறையில் முக்கிய நட்சத்திரம் ஆவார்.

நாடகம் சங்கீதத்தை விட எப்போது தரம் தாழ்ந்ததில்லை என்று அவ்வப்போது கூறி வந்த ந முத்துசாமி கூத்துப்பட்டறை என்ற ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி பிரபல நடிகர்களுக்கு பிதாமகனாக விளங்கினார்.

அந்த வகையில் ஜோக்கர் படத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் குரு சோமசுந்தரம். இவர் கூத்துப்பட்டறையில் 9 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்.

விஜய் சேதுபதியை செதுக்கியவர்.. பத்மஸ்ரீ பெற்றவர்.. மாபெரும் கலைஞன் ந.முத்துசாமி விஜய் சேதுபதியை செதுக்கியவர்.. பத்மஸ்ரீ பெற்றவர்.. மாபெரும் கலைஞன் ந.முத்துசாமி

ஜிகர்தண்டா

ஜிகர்தண்டா

இவர் அங்கு பல நடிகர்களுக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்தவர். அவர்களுள் ஒருவர் பாபி சிம்ஹா. கார்த்தி சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவும், குரு சோமசுந்தரமும் நடித்துள்ளனர்.

ஆரவாரம்

ஆரவாரம்

இதில் பாபி சிம்ஹாவுக்கு நிஜத்தை போல் படத்திலும் குரு சோமசுந்தரம் நடிப்பை சொல்லிக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் இருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பர். இவர்கள் தோன்றும் காட்சிகளுக்கு சினிமா தியேட்டரே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

சோமசுந்தரம்

சோமசுந்தரம்

இதைத் தொடர்ந்து யாக்கை என்ற படத்தில் குரு சோமசுந்தரம் வில்லனாக நடித்திருப்பார். அதில் சராசரி வில்லனை போல் இல்லாமல் முற்றிலும் மாறுப்பட்ட வில்லனாக தோன்றியிருப்பார் சோமசுந்தரம்.

 சமூக விரோத செயல்கள்

சமூக விரோத செயல்கள்

ஜோக்கர் படத்தில் எந்த அளவுக்கு சமூக நோக்கமுள்ள வேடத்தில் நடித்தாரோ அந்த எதிர்மறையாக இப்படத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இந்த படமும் அவரது நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது.

English summary
Joker Film Hero Guru Somasundaram was the student of Koothupattarai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X