"குட்டை பாவாடை".. நைட்டில் தாம்பரம் ரோட்டில் காதல் ஜோடி செய்த காரியம்.. கரெக்ட்டா வந்த ஆட்டோக்காரர்!
சென்னை: ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. அத்துடன் இளைய சமுதாயத்தின் மீதான கவலையும், பயமும் கூடி வருகிறது. என்ன நடந்தது?
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை பகுதியில் உள்ள ஹைவேஸில் ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்று கொண்டிருந்தனர்... பைக் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த இளம்பெண், பின்பக்க சீட்டில் இருந்து, பைக்கின் முன்னால் உள்ள, பெட்ரோல் டேங்க்கின் மீது வந்து உட்கார்ந்தார்..
கண்கள் கலங்குதே.. 84 ஆண்டுகளாக கடித நட்பு.. 100வது வயதில் முதல் முறையாக வீடியோ கால்! வாவ்

முத்தம்
முன்பக்கம் தன்னுடைய காதலனை பார்த்தவாறு உட்கார்ந்ததுடன், அவரை இறுகி அணைத்துக் கொண்டார்.. இப்படியே பைக்கில் 2 பேரும் சென்றனர்.. நடுநடுவே சில்மிஷங்களும் ஆரம்பமாகின.. பிறகு திடீரென காதலனை இறுக்கி கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்தார் அந்த பெண்.. இதையெல்லாம் பார்த்து, சாலையில் சென்று கொண்டிருந்த சக பயணிகள் அதிர்ந்து போனார்கள்.. மேலும் பலர், உடனே தங்கள் செல்போனில் இதை வீடியோவாகவும் எடுத்துக் கொண்டு சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்..

பெட்ரோல் டேங்க்
இவர்கள் பைக் ஓட்டி செல்லும்போது, எதிரில் வேகமாக ஒரு லாரி வந்தது... பஸ் வந்தது... ஆனால், எதைப்பற்றியும் இந்த ஜோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை.. இறுதியில், சம்பந்தப்பட்ட இளைஞரை மைசூர் போலீசார் தட்டிதூக்கிவிட்டனர்.. அந்த இளைஞர் எச்டி கோட்டை தாலுக்கா சிவபுரா என்ற கிராமத்தை சேர்ந்தவர்... பெயர் எஸ்ஏ சுவாமி.. 2 மாதத்துக்கு முன்பும் இப்படிப்பட்ட ஒரு வீடியோ வைரலானது.. ஆனால், அதை அத்துமீறல் என்று சொல்ல முடியாது.. சாகசம் என்ற பெயரில் நடுரோட்டிலேயே காதலிக்கு சர்க்கஸ் காட்டினார் அந்த இளைஞர்.

டேங்க் காதலி
காதலியை பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு காதலன் சென்றபோது, திடீரென பைக்கை நிறுத்தினார்.. பின்னாடி உட்கார்ந்திருந்த அந்த பெண்ணை முன்பக்கம் பெட்ரோல் டேங்க் மீது ஏறி உட்கார சொன்னார்.. அந்த பெண்ணோ குட்டை ஸ்கர்ட் அணிந்திருந்ததால், அவர் மறுத்துவிட்டார். அந்த இளைஞர் கட்டாயப்படுத்தியதால், ஏற முயற்சித்தார்.. பிறகு சற்று தடுமாறிதான், டேங்க் மீது ஏறி உட்கார்ந்தார். இது அனைத்தையுமே அங்கிருந்த போலீசார் கவனித்து கொண்டிருந்தனர்.. பிறகு அருகில் வந்து, 2 பேரையும் பைக்கை ஓரங்கட்ட சொன்னார்கள்.. போலீசார் திடீரென வந்துவிட்டதால், ஸ்கர்ட் அணிந்திருந்த அந்த பெண்ணாமல் மறுபடியும் கீழே டேங்கில் இருந்து இறங்க முடியவில்லை.

செம்ம டோஸ்
இறுதியில், பெண் போலீசார் உதவியதையடுத்து கீழே இறக்கிவிடப்பட்டார்.. 2 பேருக்கும் பலத்த டோஸ் விழுந்தது. வார்னிங் தந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.. நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகமாகிவருவதால், போலீசார் எவ்வளவோ விழிப்புணர்வுகளை விடாமல் சொல்லி வருகிறார்கள்.. ஆனால், பெரிதாக யாரும் மதிப்பதில்லை.. குறிப்பாக, இளைஞர்கள், ஹெல்மட் கூட போடாமல் பைக்குகளை ஓட்டி வருவதுடன், காதலிகளுக்கு சர்க்கஸ் என்ற பெயரில் வித்தை காட்டி, விபத்துகளில் சிக்குவதும் அதிகமாகி வருகிறது.

கட்டிப்பிடித்த ஜோடி
இதோ நம் சென்னையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தாம்பரத்தில் இரவு நேரம் ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. இவர்களுக்கு எப்படியும் 22 வயதுக்கு குறைவாகவே இருக்கும்.. அந்த இளைஞர் பைக் ஓட்ட, காதலி பின்சீட்டில் உட்காராமல், காதலனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டார்.. காதலனையும் இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டார்.. 2 பேருமே ஹெல்மட் போடவில்லை.. இதை இவர்களுக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் கவனித்துள்ளார்.. ஹைவேஸில் ஹெல்மட் இல்லாமல், ஆபத்தான முறையில் பயணம் செய்யவும், அவர்களை மடக்கி, அந்த பயணத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.

லவ்வர்ஸ்
ஆனால், ஆட்டோ டிரைவர் சொன்னதை அந்த ஜோடி காதிலேயே வாங்கவில்லை.. அவரிடம் வாக்குவாதம் செய்தன.. அதுவும் அந்த பெண், பைக்கின் முன்பக்கத்தில் இருந்து கீழே இறங்காமலேயே, பைக்கில் உட்கார்ந்தபடியே ஆட்டோ டிரைவரை திட்டினார்.. அதுமட்டுமல்ல, ஒருகட்டத்தில் ஆவேசமாக ஆட்டோ டிரைவர் மீதே கோபத்தில் பாய பார்த்தார்.. உடனே இளைஞர், அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.. சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகளும், காதலர்களுக்கு அறிவுரை சொல்ல வந்தனர். ஆனால், அந்த பெண்ணோ, அடங்க மறுத்து எகிற ஆரம்பித்துவிட்டார்.

ஹைவேஸில்
அப்போதுதான், அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது, அந்த பெண் குடிபோதையில் இருக்கிறார் என்று.. அவரது தடித்த வார்த்தைகளையும், கொஞ்சமும் அடங்காத ஆவேசத்தையும் கண்டு, செய்வதறியாது வாகன ஓட்டிகள் விழித்தனர்.. உடனே நிலைமையை உணர்ந்த இளைஞர், அந்த பெண்ணை அடக்க முயன்றும் முடியாததால், ஆட்டோ டிரைடர் உட்பட அங்கிருந்தோரிடம் மன்னிப்பு கேட்க துவங்கினார்.. பிறகு, அவசர அவசரமாக பைக்கை கிளப்பிக் கொண்டு, அந்த பெண்ணையும் ஏற்றிக்கொண்டு பறந்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகிறது.. இந்த பிள்ளைகள், ஹெல்மட் போடாமல் போகிறார்களே என்று நினைத்து கவலைப்படுவதா?? அல்லது இப்போதே குடிபோதையில் சிக்கிவிட்டார்களே? என்று நினைத்து கவலைப்படுவதா??