ஜோஸ் ஆலுக்காஸ்: தற்கொலை செய்த தந்தை.. போலீஸுக்கு பயந்து ஈமச் சடங்கிற்கு கூட வராத கொள்ளையன் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தந்தை இறந்ததற்கு கூட தனது சொந்த ஊருக்கு செல்லாமல் போலீஸிடம் அலைக்கழித்தபடியே இருந்தார் ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளையடித்த விஜய்.

இதுகுறித்து கோவை காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 28ஆம் தேதி அதிகாலை கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் 5.1 கிலோ கொள்ளையடிக்கப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தோம்.

Jos Alukkas Vijay didnt go to home town for his father demise

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி விஜய் (26). தருமபுரியை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் முனிரத்தினம். இவரை நாங்கள் எப்படி கண்டுபிடித்தோம் என்றால் அந்த கடையில் எடுக்கப்பட்ட கைரேகைகளை ஏற்கெனவே நடந்த திருட்டு வழக்கில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரே மாதிரியாக இருந்தன.

இது மட்டுமல்லாமல் நிறைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அவரை ஆனைமலை வரை டிராக் செய்தோம். அங்கு விஜய் அவருடைய நண்பர் சுரேஷ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது முடியவில்லை. இந்த நிலையில்தான் அவருடைய மாமியார், மனைவியிடம் இருந்து நகைகளை மீட்டோம்.

அந்த வகையில் மாமியார் யோகராணியிடம் இருந்து 1.1 கிலோ நகைகளும் மனைவி நர்மதாவிடம் இருந்து 3 கிலோ நகைகளையும் மீட்டோம். இந்த நகைகளில் வைரம் கிடைக்கவில்லை. மாமியார் தருமபுரியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் நிலையில் வைரங்களை விஜய் ஆங்காங்கே புதைத்து வைத்திருந்தார். விஜய்யை பிடிப்பதில்தான் சவாலாக இருந்தது. தருமபுரியில் மலை பாங்கான பகுதியும் காட்டு பகுதியும் இருந்தது.

சிறு வயது முதலே இந்த பகுதிகளில் வளர்ந்ததால் அவருக்கு எல்லா இடங்களும் தெரிந்தது. இதனால் அங்கு அவரை பிடிக்க முடியவில்லை. 2 அல்லது 3 நாட்கள் கழித்து அவர் வெளியே வந்துவிட்டார். அவரை பின்தொடர்ந்தோம். சென்னை, திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் என தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் நேற்று விஜய்யை கைது செய்த போது அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளியை பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் எந்த துப்புமே துலங்காத நிலையில் கடினமாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்துள்ளோம். விஜய் தனது நண்பர் சுரேஷின் மாமாவின் வீட்டை லீசுக்கு எடுக்க முயற்சித்தார். அதற்கு ரூ 1 லட்சம் தேவைப்பட்டது. இதனால் செல்போன் கடையில் திருட முற்பட்டார்.

நவம்பர் 28ஆம் தேதி இரவு செல்போன் கடைகளுக்கு சென்றபோது அங்கு இரவு நேர காவலர்கள் இருப்பதை கண்டார். இதனால் விரக்தியுடன் திரும்பிய விஜய்க்கு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை சுவரில் இருந்த ஓட்டை அவருடைய கண்களுக்கு தெரிந்தது. இதையடுத்து நள்ளிரவில் உள்ளே நுழைந்த அவர் அங்கு பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தார். ஆனால் பணம் இல்லாததால் நகைகளை திருட முயற்சித்தார்.
விஜயின் தந்தை முனிரத்தினம் (50) கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை இறந்தது முதலே விஜய் தனது சொந்த ஊருக்கு செல்லவில்லை என தெரிவித்ததாக ஆணையர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+