அப்படீன்னா இவ்வளவு நாள் பேசியதெல்லாம் பொய்யா கோப்பால்.. தம்பிதுரையை கலாய்த்த ஜோதிமணி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை கலாய்த்து ஜோதிமணி ட்வீட் போட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்படின்னா.. இவ்வளவு நாளா பேசிட்டு இருந்ததெல்லாம் பொய்யா கோப்பால்.. என்ற ரேஞ்சில் ஜோதிமணி தம்பிதுரை குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே பாஜகவை அதிகம் விமர்சித்தவர் தம்பிதுரைதான். வைகோ, ஸ்டாலின் போன்றவர்களாவது ஸ்டேட் லெவல்தான், ஆனால் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையோ சென்ட்ரல் லெவல் எதிர்ப்பு!

அதனால்தான் பேரவையிலேயே பாஜக என்ன சொன்னாலும் அதற்கு முதல் ஆளாக எதிர்ப்பு சொன்னார். ஒரு கட்டத்தில் பாஜகவுடன் கூட்டு கிடையாது என்றார்.

தம்பிதுரை கப்சிப்!

தம்பிதுரை கப்சிப்!

இதற்கெல்லாம் உச்சக்கட்டமாக, திராவிட கட்சிகளை தமிழ்நாட்டுக்கு உள்ளே வரவிட மாட்டோம்னு சொல்றாங்க? நாங்க எப்படி அவங்களோட கூட்டணி வைக்க முடியும்?" என்று நச்சென ஒரு கேள்வியை கேட்டார். ஆனால் இதெல்லாம் காற்றிலே கலந்து பறந்து போய்விட்டு 2 நாளாகிறது. பாஜக 5 சீட் வாங்கின கையோடு தம்பிதுரை கப்சிப்!!

திருப்பதி

திருப்பதி

கட்சி தன்னை தூக்கி எறிஞ்சிடும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல.. ஒரு சத்தத்தையும் காணோம். பிறகுதான் திடீரென அந்த போட்டோ நம் கண்ணில் பட்டது. திருப்பதிக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் போய் சாமி கும்பிட்டு ரொம்ப குதூகலமாக திரும்பி வந்து கொண்டிருப்பது போன்ற போட்டோ அது.

வரலாற்று தருணம்

வரலாற்று தருணம்

இதைதான் காங்கிரசின் ஜோதிமணி ட்வீட்டில் எடுத்து போட்டு, "பிஜேபி என்கிற பாரத்தை தம்பிதுரை அவர்கள் மகிழ்ச்சியோடு சுமந்த அந்த வரலாற்றுத் தருணம்😃" என்ற வரிகளை பதிவிட்டுள்ளார்.

சீட் கிடைக்குமா?

"பாஜக தம்பிதுரைக்கு பாரம்" என்பது கடந்த காலத்தில் சேர்த்து விட்டார் ஜோதிமணி. அப்படியானால், இனி பாராளுமன்றத்தில் எதிர்க்க போவதில்லை என்பது மட்டுமல்ல, முதலில் தம்பிதுரைக்கு சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான்,

ராகுல் செருப்பு

ஆனால், ஜோதிமணியின் இந்த ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிகிறது. குறிப்பாக, ராகுல்காந்தி, நாராயணசாமி போட்டோவுடன் கூடிய மீம் ஒன்று உள்ளது. அதில் நாராயணசாமி வேட்டியை இழுத்து மடித்து கொண்டு ராகுல்காந்தியின் செருப்பை கையில் வைத்து கொண்டு நிற்கிறார். "பப்பு என்கிற பாரத்தை நாராயணசாமி அவர்கள் மகிழ்ச்சியோடு சுமந்த அந்த வரலாற்றுத் தருணம்😃" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+