விஜய்யை ஓரங்கட்டி! திமுக- அதிமுக கூட்டணி சதி அம்பலம்! திருமாவுக்கு முதல்வர் பதவி! பிரபலம் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக- அதிமுக இணைந்து விஜய் முதல்வராவதை தடுத்துவிட்டு அவருக்கு பதிலாக திருமாவளவனை முதல்வராக்க திட்டமிட்டதாக பத்திரிகையாளர் கோலப்பன் ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவில் 59 எம்எல்ஏக்களும், அதிமுகவில் 46 எம்எல்ஏக்களும் வென்றுள்ளார்.

DMK AIADMK

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது. இதனால் அக்கட்சிக்கு 112 கிடைத்தது. ஆனால் பெரும்பான்மைக்கு 6 தேவைப்படுகிறது. இதனால் கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவை விஜய் கேட்டிருந்தார்.

இதில் கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கடிதம் கொடுத்துவிட்டன. கம்யூனிஸ்டுகளின் முடிவுதான் எனது முடிவும் என திருமாவளவன் சொல்லியிருந்த நிலையில் இரவு வரை தொண்டர்களுடன் ஆலோசனையில் இருந்தார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுடனும் அவர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. மறு நாள் 9 ஆம் தேதி காலை தவெகவுக்கான ஆதரவு கடிதம் கொடுக்கப்படும் என அவரது கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்த போது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் விஜய் முதல்வராவதை முறியடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. முதலில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்கிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்த யூகங்கள் கொடி கட்டி பறந்ததற்கேற்ப எம்பி தம்பிதுரையும், எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 9ஆம் தேதி மாலை தவெகவுக்கு விசிக ஆதரவு என செய்தி வெளியானது. ஆதரவு கடிதத்தை திருமாவளவன், ஆதவ்விடம் கொடுத்தனுப்பினார். இவ்வாறு ஆதரவு கடிதம் கொடுக்கும் நிலையில் அதை காலையிலேயே கொடுக்காமல் எதற்காக இத்தனை தாமதம் என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து தற்போது மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் "தலித் முதல்வர்" என்பது பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய அரசியல் கனவு. சமீபத்திய அரசியல் நகர்வுகளின்படி, அந்தக் கனவு நனவாவதற்கான மிக நெருக்கமான சூழல் உருவானது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக "கைக்கும் வாய்க்கும்" இடையிலான தூரத்தில் அந்த வாய்ப்பு நழுவியுள்ளது.

பொதுவாக தலித் அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் ஒருபுறம் இருந்தாலும், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டுமே இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவான நிலையை எடுத்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

journalist kolappan

அதிமுகவின் முன்னெடுப்பு: தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்டவும், ஒரு பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் அதிமுக திட்டமிட்டிருந்தது.

திமுகவின் நிலைப்பாடு: திமுகவும் இந்த நகர்வுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்காமல், ஒரு இணக்கமான போக்கையே கடைப்பிடித்தது.

திருமாவளவனின் முடிவும் காலதாமதமும்

இந்த அரசியல் மாற்றத்தில் மிக முக்கியப் புள்ளியாக இருந்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

ஆதரவுக் கடிதம்: நடிகர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கான ஆதரவுக் கடிதத்தை வழங்குவதில் ஒரு இழுபறி நீடித்தது. இடதுசாரி கட்சிகள் தங்கள் ஆதரவுக் கடிதங்களை முதலிலேயே வழங்கிவிட்டன.

மர்மமான தாமதம்: அன்று காலை செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவித்திருந்த திருமாவளவன், திடீரென அதை மாலைக்கு ஒத்திவைத்தார். அதிமுகவின் "தலித் முதல்வர்" திட்டத்தைப் பரிசீலிப்பதால்தான் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகக் கருதப்பட்டது.

வாய்ப்பை நழுவவிட்ட தருணம்

அதிமுக தரப்பில் அந்தத் திட்டத்தை இறுதி செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

"அதிமுக தனது இறுதி முடிவை எடுத்து திருமாவளவனிடம் கொண்டு சேர்ப்பதற்குள் காலம் கடந்துவிட்டது. ஒருவேளை இன்னும் சில மணிநேரங்கள் முன்பாக அந்தத் திட்டம் இறுதி செய்யப்பட்டிருந்தால், தமிழகத்தின் அரசியல் வரைபடம் இன்று மாறியிருக்கும்."

மாலை நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்ட திருமாவளவன், அங்குக் காத்திருந்த ஆதவ் அர்ஜுனாவிடம் தனது ஆதரவுக் கடிதத்தை ஒப்படைத்தார். இதன் மூலம், ஒரு தலித் முதல்வர் உருவாவதற்கான வாய்ப்பு அந்தத் தருணத்தில் முடிவுக்கு வந்தது என கோலப்பன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறவிடப்பட்ட வாய்ப்பின் பாதிப்புகள்

சமூக நீதி விவாதம்: 39 ஆண்டுகளுக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகியுள்ள சூழலில், தலித் முதல்வர் வாய்ப்பு நழுவியது தலித் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கூட்டணி மாற்றங்கள்: இந்தக் கடைசி நிமிடத் திருப்பங்கள் எதிர்காலக் கூட்டணி அமைப்புகளிலும், கட்சிகளுக்கு இடையிலான நம்பிக்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

விஜய் முதல்வர் பதவியை ஏற்க போவதில்லை என்றும் அவருக்கு பதில் திருமாவளவனை எம்எல்ஏ ஆக்க தவெக திட்டமிட்டிருந்ததாகவும் அதற்கு திருமாவளவன் மறுத்துவிட்டதாகவும் ஒன் இந்தியா தமிழுக்கு திருச்சி சூர்யா பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+