ஸ்டாலினுக்கு நிகரான தலைவர் தமிழகத்தில் இல்லை! திமுக சொம்புன்னு சொன்னாலும் கவலையில்லை! சொல்றது யார்?
சென்னை: ஸ்டாலினுக்கு நிகரான ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இல்லை என்றும் ஸ்டாலினுடன் அண்ணாமலையை ஒப்பிடுவது தவறு எனவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
இப்படி பேசுவதற்காக தன்னை திமுக சொம்பு என்று சொன்னாலும் கவலையில்லை என்றும் பத்திரிகையாளர் என்ற பார்வையில் தனது மனதில் பட்டதை தான் பேசுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவசர அவசரமாக பதவிகள் கொடுப்பதை கூட இதற்கு முன் தாம் விமர்சித்துள்ளதாகவும் இதனால் வெறுமனே புகழ்ந்து மட்டும் பேசும் ஆளும் தாமில்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.

செய்தி தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ப்ரியன் இதனைக் கூறியுள்ளார். திமுகவை போல் அதிமுக வலிமையான கட்டமைப்போடு இன்றைய காலகட்டத்தில் திகழவில்லை என்றும் சீமான் இப்போது தான் வளர்ந்து வருகிறாரே தவிர இன்னும் அவர் வளரவில்லை எனவும் பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினை பலவீனமான நபராக அடையாளப்படுத்த பாஜக முயற்சிகள் மேற்கொள்வதாகவும் அதனால் தான் இப்போதெல்லாம் ஸ்டாலினை விட அதிகமாக உதயநிதியை பாஜக விமர்சித்து வருவதாகவும் கூறிய பத்திரிகையாளர் ப்ரியன், உதயநிதி ஸ்டாலினை தனி நபராக பார்க்கக் கூடாது 2 கோடி உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சியின் முக்கிய பிரமுகர்/ தலைவர் என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் அப்படித்தான் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலினின் வளர்ச்சி வேகமாக இருப்பதாகவும் 2024 தேர்தலில் தான் பிரச்சாரத்திற்கு களமிறக்கப்படுவார் என நினைத்த நிலையில் 2019 தேர்தலிலேயே களமிறக்கப்பட்டார் என்றும் கூறியுள்ள ப்ரியன், இவ்வளவு சீக்கிரம் உயர்ந்த முக்கிய பதவிகள் தரப்படும் என தாம் நினைக்கவே இல்லை என்றார். வாரிசு அரசியல் விமர்சனத்தை திமுக எளிதாக கடந்து செல்லும் என்றும் நீட் விவகாரத்தில் பல முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்காததால் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் என்ற முன்னெடுப்பின் மூலம் அரசியலில் கவனம் ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications