விஜய்காந்தின் அணுகுமுறை இது.. விஜய் கூட்டத்தை இப்படி பார்த்ததே இல்லை! - பத்திரிக்கையாளர் சுவாமிநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் இன்று விஜய் மேற்கொண்டிருந்த பிரச்சாரம், பல்வேறு தரப்பினரிடையே கவனம் பெற்றிருந்தது. இந்த கூட்டம் பெரிய அசம்பாவிதம் ஏதும் இல்லாமல் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், இந்த கூட்டம் குறித்தும், விஜய்யின் பேச்சு குறித்தும் ஒன்இந்தியா தமிழுக்கு பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேட்டியளித்து கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "9-10 நிமிடம்தான் பேசுறேன் என்கிற விமர்சனம் தன்மீது இருப்பதை விஜய் ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு அவர் பேசியது நீண்ட உரைதான். அரசியல் மையமாகவும் அவருடைய உரை நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டிருந்து. தொடக்கத்தில் மங்களகரமான மஞ்சளிலிருந்து தொடங்கியுள்ளார். கொள்கை தலைவராக பெரியாரை அறிவித்திருக்கக்கூடிய ஒரு இயக்கம் சென்டிமென்டா மஞ்சள் இருந்து தொடங்குறாங்க. பெரியாரை பின்னுக்கு தள்ளி விட்டாங்க.

Vijayakanth Vijay TVK

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா

இந்த பேச்சில் அரசியல் மையம் நோக்கம் மட்டும்தான் முழுமையாக இருந்தது. இன்றைய உரை சிறப்பான உரைதான். திமுகவை நோக்கி பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இன்னொன்று அதிமுகவோட லெகசியாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் பெயரையும், ஜெயலலிதா பெயரையும் விஜய் குறிப்பிட்டே பேசுறாரு. தீய சக்தி என்கிற வார்த்தையை அவர்களிடமிருந்து எடுத்துக்கிறாரு.

இரண்டு அர்த்தம்

ஒவ்வொரு பேச்சிலும் இரண்டு பொருள் இருக்கும். அதுபோலதான் விஜய்யின் பேச்சில் அதிமுக சாயல் தெரிவதும். அதிமுகவின் இண்டாவது இடத்திற்கு நாம் வர வேண்டும். அப்போதுதான் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்த முடியும் என்கிற விஷயம் தெரிந்தவராகவே அவருடைய பேச்சு இருந்தது. அதனாலதான் அதிமுகவை விமர்சிக்காம, வலிமையா இல்லாதவர்களை நாங்க ஏன் விமர்சிக்கிறோம்? என்று கடந்து போகிறார்.

விஜய்யின் திட்டம்

ஒருபுறம் அதிமுகவுக்கான இடத்தில் தவெகவை தக்க வைக்க வேண்டும். மற்றொருபுறம் திமுகவுக்கு எதிர் நாங்கள்தான் என்பதையும் நிலைநிறுத்த வேண்டும். இந்த இரண்டு இடத்தை நோக்கி விஜய் நகர்வதைத்தான் நான் பார்க்கிறேன். இந்த பிரச்சாரத்தில் ஈரோட்டின் உள்ளூர் பிரச்சனைகளை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளை விஜய் பேசியிருக்கிறார். இருப்பினும் அதிமுகவின் இடத்தில் இருக்க வேண்டும் என்கிற முடிவோடுதான் அவர் வந்திருக்கிறார்.

சமீபத்தில் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து இணைத்திருக்கிறீர்கள். இருப்பினும் அந்த கட்சியை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதேநேரம் அதிமுக ஒன்றுமே இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் கற்றுக்கொண்ட பாடம்

மற்றொரு விஷயம் விஜய் தொண்டர்களிடம் நடந்துக்கொண்ட அணுகுமுறை. பொதுவா விஜய் உரிய நேர்த்திற்கு கூட்டங்களுக்கு வர மாட்டார். ஆனால், சமீபத்திய கூட்டங்களில் நேரத்திற்கு பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போது தொண்டர் ஒருவர் திடீரென மைக் கம்பத்தில் ஏறுகிறார். அவரை கீழே இறக்க வைக்க பொறுமையுடன் அணுகுகிறார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் பாடத்தை கற்றுக்கொண்டார்.

தப்பு கணக்கு போடும் விஜய்

இன்று தொண்டரை கம்பத்திலிருந்து இறங்க வைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஆரோக்கியமான போக்கு. நீண்ட காலத்திற்கு பின்னர், விஜய் கூட்டம் முறைப்படுத்தப்பட்டிருந்ததை நான் இங்கு பார்த்தேன். இது விஜய்காந்தின் அணுகுமுறை. அவர்தான் ஒவ்வொரு தொண்டரின் பாதுகாப்புக்கும் கவலைப்படுவார்.

அதிமுகவின் பலம்

விஜய் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை கையில் எடுப்பதாலும், அதிமுகவை விமர்சிக்காமல் விட்டுவிடுவதாலும் அதிமுக வாக்குகள் எல்லாம் தன் பக்கம் வந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறார். ஆனால் இது விஜய்க்கு பின்னடைவைதான் ஏற்படுத்தும். ஏனெனில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை பாருங்கள். அக்கட்சி பிரபலமான வேட்பாளர்களை நிறுத்தவில்லை. இருப்பினும் 21% வரை வாக்குகளை பெற்றார்கள். இது எப்படி நடந்தது? இரட்டை இலைக்கு உள்ள வேல்யூ இது.

அதிமுகவின் பலவீனம்

ஆனால் விஜய் என்ன நினைக்கிறார்? திமுக மீதான எதிர்ப்பை கூர்மைப்படுத்தினாலே போதும். அதிமுக ஓட்டுகள் எல்லாம் நம் பக்கம் வந்துவிடும் என்று நினைக்கிறார். ஆனால் அதெல்லாம் சாத்தியமில்லை. மறுபுறம் 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட ஒரு இயக்கம் அதிமுக. ஆனால், அது பெரும்பாலான விஷயங்களுக்கு போதுமான அளவில் ரியாக்ட் செய்யவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது பலவீனமாகவே இருப்பதாகவே கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+