அரண்ட அண்ணாமலை..ஆஹா ஒன்னு கூடிட்டாங்களே மீடியாக்கள்! அநாகரீக பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தரக்குறைவான பேச்சை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளன.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கடந்த 19 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில், அவர் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை தெரிவித்த கருத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேர்காணலை எடுத்த பத்திரிகையாளரை மிக மோசமாக அண்ணாமலை சித்தரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு பல்வேறு பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "பொது வெளியில் பேசும்போது, சாதாரண பொதுமக்கள் கூட பேசத் தயங்கும் கேவலமான வார்த்தைகளை அண்ணாமலை மிகச் சாதாரணமாக பேசியுள்ளார். அதுவும் பத்திரிகையாளரை குறிப்பிட்டு அவ்வாறு பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலை தெரிவித்த கேவலமான கருத்துகளுக்கு இதுவரை அவர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத நிலையில், தற்போது மிகவும் தரம் தாழ்ந்து மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த இழிவான நடவடிக்கைகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகின்றது. ஒருமுறை, அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், அண்ணாமலையின் இந்த தரங்கெட்ட தொடர் செயல்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலில், சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் அண்ணாமலை அளித்துள்ள பதிலிலும், பிரஸ் கவுன்சிலை அவமதிக்கும் வகையிலும், எதற்காக புகார் அளிக்கப்பட்டதோ அதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாய்க்கு வந்த வகையில் உளறிக்கொட்டியுள்ளார். இவ்வாறு நாம் கொடுத்த புகாருக்கான ஆதாரத்தை தன்னுடைய பதில் அறிக்கையின் மூலம் அண்ணாமலையே கொடுத்திருக்கும் நிலையிலும், மாதங்கள் பல கடந்தும் இந்திய பிரஸ் கவுன்சிலில் நமது புகார் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தரம் தாழ்ந்து நடந்துள்ளார் அண்ணாமலை.
ஆகவே, அண்ணாமலையின் இந்த கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்ணாமலையின் இந்த தொடர் கீழ்த்தர நடவடிக்கையை, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டிப்பதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது புகாருக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்துகொள்ளும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பை, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தும் அதே வேளையில், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகை நிறுவனங்களை ஏற்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தான் பேசிய கேவலமான வார்த்தைகள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பேசப்படுவது என்று வாய் கூசாமல் பொய் சொன்னதுடன், தமிழ்நாடு மக்களையும் அவமானப்படுத்தியுள்ள அண்ணாமலை மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் பத்திரிகையாளார்களை கீழ்தரமாக பேசிவரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை மாலை 4 மணியளவில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்து உள்ளன.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தை சேர்ந்த அசீப் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்களின் ஆசிரியர்கள், பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.
-
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications