அதிர்ந்த அண்ணாமலை..போராட்டத்தில் குதித்த பத்திரிகையாளர்கள்! சென்னையில் விண்ணை முட்டிய கண்டன முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தியாளர் சந்திப்பில் தனியார் தொலைக்காட்சி நெறியாளரை தரக்குறைவாக விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கடந்த 19 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில், அவர் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை தெரிவித்த ஒப்பீடு பத்திரிகையாளர்கள் பலரை கொந்தளிப்படைய வைத்தது. பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் சங்கங்களும் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தன.

Journalists protested against Tamil Nadu BJP President Annamalai in Chennai

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், "பொது வெளியில் பேசும்போது, சாதாரண பொதுமக்கள் கூட பேசத் தயங்கும் கேவலமான வார்த்தைகளை அண்ணாமலை மிகச் சாதாரணமாக பேசியுள்ளார். அதுவும் பத்திரிகையாளரை குறிப்பிட்டு அவ்வாறு பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலை தெரிவித்த கேவலமான கருத்துகளுக்கு இதுவரை அவர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத நிலையில், தற்போது மிகவும் தரம் தாழ்ந்து மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.

Journalists protested against Tamil Nadu BJP President Annamalai in Chennai

அண்ணாமலையின் இந்த இழிவான நடவடிக்கைகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகின்றது. ஒருமுறை, அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், அண்ணாமலையின் இந்த தரங்கெட்ட தொடர் செயல்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலில், சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் அண்ணாமலை அளித்துள்ள பதிலிலும், பிரஸ் கவுன்சிலை அவமதிக்கும் வகையிலும், எதற்காக புகார் அளிக்கப்பட்டதோ அதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாய்க்கு வந்த வகையில் உளறிக்கொட்டியுள்ளார். இவ்வாறு நாம் கொடுத்த புகாருக்கான ஆதாரத்தை தன்னுடைய பதில் அறிக்கையின் மூலம் அண்ணாமலையே கொடுத்திருக்கும் நிலையிலும், மாதங்கள் பல கடந்தும் இந்திய பிரஸ் கவுன்சிலில் நமது புகார் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தரம் தாழ்ந்து நடந்துள்ளார் அண்ணாமலை.

ஆகவே, அண்ணாமலையின் இந்த கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்ணாமலையின் இந்த தொடர் கீழ்த்தர நடவடிக்கையை, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டிப்பதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது புகாருக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்துகொள்ளும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பை, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தும் அதே வேளையில், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகை நிறுவனங்களை ஏற்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தான் பேசிய கேவலமான வார்த்தைகள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பேசப்படுவது என்று வாய் கூசாமல் பொய் சொன்னதுடன், தமிழ்நாடு மக்களையும் அவமானப்படுத்தியுள்ள அண்ணாமலை மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் முன்னணி ஊடகங்கள் ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ஊடக பணியாளர்கள் இணைந்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற ஊடகங்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+