"DNA டெஸ்ட்டுக்கு வந்தா மாட்டிப்பார்ல..” மாதம்பட்டி ரங்கராஜை மீண்டும் சீண்டிய ஜாய் கிரிசில்டா!
சென்னை: டிஎன்ஏ சோதனைக்கு பயந்து மாதம்பட்டி ரங்கராஜ் தலைமறைவாக இருப்பதாக குற்றம்சாட்டி அவரைச் சீண்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை எனக் கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஜாய் சிரிசில்டா.
பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், அவர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். புகழ்பெற்ற சமையல் கலைஞராக திகழ்ந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான் இருந்து வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் செயல்பட்டார் ரங்கராஜ்.
இந்நிலையில் தான் அண்மையில், ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜூடன் திருமண புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, தனிப்பட்ட வீடியோக்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கிவிட்டு ஏமாற்றி விட்டதாக போலீசிலும் புகார் அளித்தார். மேலும், பல்வேறு யூடியூப் தளங்களில் பேட்டி அளித்து வருகிறார் ஜாய்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசில்டாவுக்கு தாலி கட்டியுள்ளார். ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மூலம் கர்ப்பமான நிலையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தான் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜை சீண்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார் ஜாய் கிரிஸில்டா.
தான் ஜாய் கிரிசில்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தைக்கு தான் அப்பா என்று ஒப்புக்கொண்டதாகவும் ஜாய் ஒரு பதிவு போட்டார். ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ், தான் மகளிர் ஆணையத்தில் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அது என்னுடைய குழந்தை இல்லை. அதற்காக டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் அறிவிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இன்று ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "காணவில்லை.. ராகா ரங்கராஜின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜை கடந்த 1 மாதமாக காணவில்லை. DNA test-க்கு பயந்து தலைமறைவாக உள்ளார். இவரை ஏதேனும் நிகழ்வில் பார்த்தால் உடனே எனக்கு தெரியப்படுத்தவும்.
குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம். அதான் ஒளிந்து ஓடுகிறார். ப்ரூவ் பண்ணினா தான் சார் மாட்டிப்பார். இல்ல ஒருவேளை பணம் குடுத்து DNA test correct பண்ண நேரம் எடுக்கிறார் போல???
நீங்க தான் எல்லாமே சட்டப்பூர்வமாக சந்திக்கும் ஆள் ஆச்சே.. இதை மட்டும் ஏன் உங்களால் legal ஆ face பண்ண முடியவில்லை??? 😂😂 Husband என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்களை ஏமாற்றலாம். ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது.
"அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்". செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications