இதுக்குதான் ஆர்சிபி ஜெயிக்க கூடாதுன்னு நினைச்சாங்களோ! ஓவராக போன ரசிகர்கள்..வீடியோவை பாருங்க புரியும்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றதை அந்த அணியின் ரசிகர்கள் வரம்பு மீறி கொண்டாடியது கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. ஆர்சிபி அணி ஏன் ஜெயிக்க கூடாது என்று சிஎஸ்கே உள்பட பிற அணி ரசிகர்கள் இதற்காகத்தான் நினைத்து இருப்பார்களோ? என நினைக்கும் அளவுக்கு அந்த அணி ரசிகர்கள் செய்த அலம்பலங்களும் இன்று நடைபெற்ற துயர நிகழ்வும் அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை அதற்கு ரசிகர்கள் ஏரளாமானோர் இருந்து வருகிறார்கள். சென்னை அணி, மும்பை அணி என ஒவ்வொரு அணிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் தோனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை, மும்பை அணி
தோனிக்கு தமிழகத்தினை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலத்திலும் ரசிகர்கள் அதிகம் இருந்து வருகிறார்கள். இதற்கு அடுத்ததாக சச்சின் தெண்டுல்கர் ரசிகர்கள் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சப்போர்ட் செய்தனர். இந்த வரிசையில் தான் விராட் கோலிக்கும் தமிழகம், பெங்களூர், மும்பை என இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு முறை ஐபிஎல் போட்டி நடக்கும் போதும் அந்தந்த ரசிகர்கள் இடையே போட்டி ஏற்படுகிறது.
இதில் சென்னை அணி ரசிகர்கள் நாங்கள் 5 முறை கப் வாங்கியிருக்கிறோம் என்றும், மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களும் நாங்களும் 5 முறை கப் வாங்கியிருக்கிறோம் என்றும் ஆர்சிபி அணியினரை விமர்சித்து வந்தனர். ஐபிஎல் போட்டி தொடங்கி 17 சீசன் முடிந்துள்ள நிலையில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக பெங்களூர் இருந்து வந்ததால் அந்த அணி ரசிகர்களை மற்ற அணி ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். ஆனாலும் அதைப்பற்றி கவலைப் படாமல் ஈசாலே கப் நம்தே என்று கூறி வந்தனர்.
கோப்பை வென்ற ஆர்சிபி
17 முறை விளையாடி ஒரு முறை கூட கோப்பை வெல்லாவிட்டாலும் கூட அந்த அணியின் ரசிகர்கள் எல்லை மீறி செயல்படுவதாக பொதுவான கருத்துக்கள் பரவி வருகின்றன. ஈசாலே கப் நமதே என ஒவ்வொரு முறையும் சொல்லி வந்தது. இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே பெங்களூர் அணி சிறப்பாக விளையாடியதனால், 8வது ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
17 முறை தோற்ற போதே ஆர்சிபியை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள் ஜெயித்தால் என்ன செய்வார்கள் என்பதற்கு எல்லாருக்கும் தெரியும். அப்படித்தான் நேற்று முழுவதும் பெங்களூர் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுக்க பட்டாசுகளை வெடிக்க செய்து பெங்களூர் நகர மக்களின் தூக்கத்தை கெடுத்ததாகவும் பரவலான பேச்சுக்கள் உள்ளன. இது மட்டுமின்றி மேலும் சில அநாகரீக செயலிலும் ஆர்சிபி ரசிகர்கள் ஈடுபட்டுள்ள சம்பவங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பஸ்களை மறித்து அட்டகாசம்
This is the reason why no CSK fans wanted RCB to win pic.twitter.com/HsvRmONYi0
— Surya (@SuryaDhoni22) June 4, 2025
நேற்று இரவு ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், பெங்களூரில் உள்ள சாலைகளில் செல்லும் பஸ்களை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ்களை செல்ல விடாமல் சாலையில் நிறுத்தி வைத்து ஆர்சிபி ஆர்சிபி என கத்தி வந்தனர். இன்னும் சிலர் சென்னை அணி ரசிகர் ஒருவர் அணிந்திருந்த சிஎஸ்கே ஜெர்சியை கிழித்து அதனை சாலையில் கீழே போட்டு பைக்குகளில் அதன்மீது ஏற்றி இறக்கி அட்டூழியம் செய்தனர்.
Take Strict Action on such Rogues @APPOLICE100 pic.twitter.com/7J0TGrwSvT
— Mahesh Goud 🚩 #9999# (@indian66669296) June 4, 2025
இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாது.. அந்த அணியால் ஒருநாளும் கோப்பை வெல்லமுடியாது எண்று சமூக வலைத்தளங்களில் ஐபிஎல் ரசிகர்கள் கருத்து யுத்தம் நடத்துவார்கள். இந்த ஆண்டும் ஆர்சிபி அணி அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கி முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
நெட்டிசன்கள் கருத்து
17ஆண்டுகளுக்கு பிறகு 18-வது ஆண்டில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு ஆதரவாக அந்த அணி ரசிகர்கள் கொஞ்சம் ஓவராகவே கொண்டாட தொடங்கிவிட்டார்கள். பெங்களூர் சாலைகளில் நேற்று இரவு முதல் நடைபெற்ற வரம்பு மீறிய செயல்களே இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதை விட மோசமாக இன்று நடைபெற்ற வெற்றிக்கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்..
RCB fans requested Lorry driver to honk. Driver obliged 😅#EeSalaCupNamde #Rcbvspbks #ViratKohli𓃵 #IPLFinals #IPL2025Final pic.twitter.com/zHioltJa8J
— 👑Che_Krishna🇮🇳💛❤️ (@CheKrishnaCk_) June 3, 2025
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இதற்காகத்தான் பெங்களூர் அணி கோப்பை வெல்லக் கூடாது என்று இத்தனை ஆண்டுகளாக பிற அணியின் ரசிகர்கள் சொல்லி வந்தார்கள் போல என நினைக்கும் அளவுக்குமான மறக்கமுடியாத துயர நிகழ்வுகளும் நடந்து இருகப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை அணி அப்படியல்ல
சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வாங்கினாலும் கூட ஒருமுறை கூட ரசிகர்களும் சரி, வீரர்களும் சரி எல்லை மீறி நடந்ததில்லை. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியை கடைசி போட்டியில் பெங்களூர் அணி வீழ்த்தியதற்கே விராட் கோலி செய்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவி கடுமையான விமர்சனங்களை பெற்றது.
இந்த ஆண்டு பெங்களூரில் நடந்த சென்னை - பெங்களூர் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்த போது, சென்னை அணி ரசிகர்களை தாக்கியது போன்ற அட்டூழிய செயல்களில் ஆர்சிபி ரசிகர்கள் ஈடுபட்ட வீடியோக்களும் இணையத்தில் பரவி இருந்தது குறிப்பிட்டத்தக்கது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
76 பந்துகளுக்கு பின் முதல் சிக்ஸ்.. சூர்யவன்ஷி கிட்ட சொல்லிடாதீங்க.. குஜராத்தை வெளுக்கும் ரசிகர்கள்! -
இதுக்கு பேருதான் ஆதிக்கம்.. ஆர்சிபிக்கு எதிராக 3வது முறை.. பவர்பிளேயிலேயே சுருண்ட கில் - சுதர்சன்! -
குஜராத் அணி கதை ஓவர்.. ஹேசல்வுட்டிடம் 3வது முறையாக வீழ்ந்த சுப்மன் கில்.. சைலண்ட்டான அகமதாபாத்! -
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications