'தமிழகத்தில் சூரியன் என்றும் மறைவதில்லை மைலார்ட்'.. நீதிபதியின் கேள்விக்கு டைமிங்கில் ஏஏஜி பதில்
சென்னை: தேசிய தகவல் மையத்தின் இணையதளம் தொடர்பான ஒரு வழக்கின் போது இந்த சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் அந்த இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அப்போது நீதிபதி எழுப்பிய கேள்வியும் அதற்கு கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சுவாரஸ்யமான அந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
நீதிமன்றங்களில் அவ்வப்போது விவாதங்களின் போது சுவாரஸ்யமான உரையாடல்கள் நடைபெறுவது உண்டு. கடுமையான பணிகளுக்கு மத்தியில் விவாதம் சிலே நேரங்களில் ஆச்சரியமானதாக மாறுவது உண்டு. வழக்கறிஞரின் கேள்வி அல்லது பதிலை வைத்தே டைமிங்கில் கேள்வி அல்லது பதிலை தந்து நீதிபதிகள் சுவாரஸ்யமாக மாற்றுவார்கள். இல்லை என்றால் நீதிபதிகளின் கேள்விக்கு வழக்கறிஞர்களும் டைமிங்கில் பதில் தந்து சுவாரஸ்யமாக மாற்றுவார்கள்.

அப்படித்தான் தேசிய தகவல் மையத்தின் இணையதளம் தொடர்பான ஒரு வழக்கின் போது இந்த சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் அந்த இணையதளம் சரியாக வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.அப்போது நீதிபதி எழுப்பிய கேள்வியும் அதற்கு கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் அளித்த பதில்களை பார்ப்போம்
நீதிமன்றத்தில் நடந்த 'பஞ்ச்' உரையாடல்:
நீதிபதி: இணையதளம் 6 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை என்று சொல்லப்படுகிறதே? சூரியன் மறைந்த பிறகு இங்கு எதுவுமே வேலை செய்யாதா என்ன? என்று கிண்டலாகக் கேட்டார்.
அப்போது கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் , நீதிபதியின் கேள்விக்கு மிகவும் சாதுர்யமாகவும், தற்கால அரசியல் மற்றும் தமிழகத்தின் பெருமையைப் பேசும் விதமாகவும் பதிலளித்தார்:
"தமிழகத்தில் சூரியன் என்றும் மறைவதில்லை மைலார்ட்!" என்றார்.
இந்த பதிலில் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன:
நிர்வாக ரீதியாக: தமிழக அரசு 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது என்பதை ஒரு வழக்கறிஞராக அவர் பெருமையுடன் பதிவு செய்தார்.
அரசியல் ரீதியாக: தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக-வின் சின்னம் 'உதயசூரியன்'. எனவே, "சூரியன் மறைவதில்லை" என்று அவர் சொன்னது நீதிமன்றத்தில் ஒரு மெல்லிய சிரிப்பலையை உருவாக்கி இருந்தது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications