பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த.. நீதிபதி நந்தினி தேவி உட்பட 77 நீதிபதிகள் பணியிடமாற்றம்
சென்னை: தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என இன்று மாலை அறிவிப்பு வெளியானது. இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திலேயே பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி உட்பட 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது வழக்கமான பணியிட மாற்றம் என்றே கூறப்படுகிறது.
எப்போதுமே அரசு அதிகாரிகளுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஒருவர் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணியாற்றுவதால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவே இதுபோல அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். அதன்படி இப்போது மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

77 பேர் பணியிட மாற்றம்
இது தொடர்பான அறிவிப்பை உயர் நீதிமன்றப் பதிவாளர் அல்லி அறிக்கை வெளியிட்டார். தமிழகம் முழுக்க மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் இப்போது கரூர் மாவட்டத்திற்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதிகள்
அதேபோல சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலனும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதியாக இருந்த ராஜலட்சுமி இப்போது விழுப்புரம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வந்த நந்தினி தேவி கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம்
கடந்த 2018-19 ஆண்டுகளில் தமிழகத்தில் மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஆகும். பெண்கள், மாணவிகள் எனப் பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து மிரட்டியதாகப் புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக 9 பேர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை துரிதமாகவே நீதிமன்றத்தில் நடந்தது. சுமார் 50 சாட்சியங்கள், 200 ஆவணங்கள், மின்னணு தரவுகள் என விரிவான விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்த நிலையில், முக்கிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் இது முழுக்க முழுக்க க்ளோஸ்ட் டோர் முறையில், அதாவது வெளியாட்களுக்கு அனுமதி இல்லாமலேயே விசாரணை நடத்தப்பட்டது. குறிப்பாகக் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணை தினசரி நடைபெற்றது. இரு தரப்பு வாதம் இன்று நிறைவடைந்த நிலையில், வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு என்னவாகும்
இதற்கிடையே தீர்ப்பு தேதி வெளியான கொஞ்ச நேரத்திலேயே நீதிபதி நந்தினி தேவி உள்ளிட்டோர் பணியிட மாற்றம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 77 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான பணியிட மாற்ற அறிவிப்பு என்றே கூறப்படுகிறது.
இப்போது பணியிட மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தீர்ப்பு என்னவாகும் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அடுத்த சில நாட்களில் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications