தமிழகத்தில் மேலும் 3940 பேருக்கு கொரோனா.. 54 பேர் மரணம்.. . மதுரையில் மோசமான பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 3940 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1443 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 32,948 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 11,10,402 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 54 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் தனியார் மருத்துவமனையிலும், 44பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1079 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர்.

 செங்கல்பட்டில் உயர்வு

செங்கல்பட்டில் உயர்வு

சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 284 பேருக்கும், செங்கல்பட்டில் 183 பேருக்கும், திருவண்ணாமலையில் 114 பேருக்கும், திருவள்ளூரில் 99 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், ராமநாதபுரத்தில் 83 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் உச்சம்

சேலத்தில் உச்சம்

வேலூரில் 84 பேருக்கும், சேலத்தில் 79 பேருக்கும், திருவாரூரில் 78 பேருக்கும், தேனியில் 62 பேருக்கும், விருதுநகரில் 58 பேருக்கும், விழுப்பரத்தில் 47 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் 34 பேருக்கும், புதுக்கோட்டையில் 36 பேருக்கும், திருச்சியில் 43 பேருக்கும், கோவையில் 32 பேருக்கும், கடலூரில் 32 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டிலும் அதிகரிப்பு

ஈரோட்டிலும் அதிகரிப்பு

கன்னியாகுமரியில் 24 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 14 பேருக்கும், ராணிப்பேட்டையில் 10 பேருக்கும், சிவகங்கையில் 27 பேருக்கும், தஞ்சாவூரில் 23 பேருக்கும், திருப்பத்தூரில் 23 பேருக்கும், திருநெல்வேலியில் 22 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 10 பேருக்கும், கன்னியாகுமரியில் 24 பேருக்கும், அரியலூரில் 3 பேருக்கும், தர்மபுரியில் 6 பேருக்கும், திண்டுக்கல்லில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

45537பேர் குணம்

45537பேர் குணம்

தமிழகத்தில் இன்று மட்டும் 1443 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஜூன் 28ம் தேதி (இன்று) நிலவரப்படி தமிழகத்தில் 45537பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 35,656 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 21,094 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

10,56,564 பரிசோதனை

10,56,564 பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 11,10,402 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்தமாக இதுவரை 10,56,564 தனிநபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 31,505 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3940 பேரில் . 2,399 பேர் ஆண்கள், 1541 பேர் பெண்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 82275 பேரில் 50745 பேர் ஆண்கள், 31509 பேர் பெண்கள் ஆவர். தொற்று பாதித்தவர்களில் 21 பேர் திருநங்கைகள்.

ஒரு வாரத்தில் 500

ஒரு வாரத்தில் 500

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 54 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1079 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிறு உடன் இந்த ஞாயிரை ஒப்பிட்டால் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் ஒரு வாரத்தில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் 809 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 80 பேரும், திருவள்ளூரில் 60 பேரும், மதுரையில் 25 பேரும் இறந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+