சென்னையில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. எந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 17598 ஆக இருந்த நிலையில் இன்று 18693 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 5ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக இராயபுரத்தில் 3388 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகமாக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. ஜூன் 5ம் தேதி காலை நிலவரப்படி 18693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9342 பேர் நோய் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 8947 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

june 5: zone wise breakup of Covid-19 positive cases in Chennai

சென்னையில் உள்ள 15 மாவட்டங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 3388 ஆக உயர்ந்துள்ளது., தண்டையார்பேட்டையில் 2261 ஆகவும். கோடம்பாக்கத்தில் 2123 ஆகவும், தேனாம்பேட்டையில் 2136 ஆகவும், திருவிக நகரில் 1855 ஆக உள்ளது. அடையாறில் 1042 பேருக்கும், அண்ணா நகரில் 1660 பேருக்கும் வளசரவாக்கத்தில் 975 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 5 ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • திருவெற்றியூர்: 670
  • மணலி: 259
  • மாதவரம் 490
  • தண்டையார் பேட்டை 2261
  • இராயபுரம் 3388
  • திருவிக நகர் 1855
  • அம்பத்தூர் 684
  • அண்ணா நகர் 1660
  • தேனாம்பேட்டை 2136
  • கோடம்பாக்கம் 2123
  • வளசரவாக்கம் 975
  • ஆலந்தூர் 289
  • அடையாறு 1042
  • பெருங்குடி 334
  • சோழிங்கநல்லூர் 339
  • பிற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட நோயாளிகள் 188
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+