முதல்வரிடம் ஸ்கோர் செய்த ஜூனியர் அமைச்சர்! தட்டிக்கொடுத்து மேடையில் நிறுத்திய சீனியர் அமைச்சர்கள்!
ஜூனியர் அமைச்சரான மதிவேந்தன் படிபடியாக திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்.
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஜூனியர் அமைச்சரான மதிவேந்தன் ஸ்கோர் செய்த விவகாரம் தான் சக அமைச்சர்கள் மத்தியிலேயே பேசு பொருளாக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி மஞ்சப்பையில் மரக்கன்று வழங்கும் திட்டத்தை வனத்துறை அமைச்சரான மதிவேந்தன் மிகுந்த ஆர்வமுடன் முன்னெடுத்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் அண்மையில் தான் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். பதவியேற்ற சில மாதங்களிலேயே பக்காவாக செயல்படத் தொடங்கியுள்ளார்.

முதல்வர் பிறந்தநாள்
முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. இதன் பின்னணியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் பங்களிப்பும் இருந்ததால் முதலமைச்சருடன் மேடையில் ஒன்றாக நின்று வாழ்த்த வந்தவர்களை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பொதுவாக அவ்வளவு எளிதாக இந்த இடத்தை சீனியர் அமைச்சர்கள் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அமைச்சர் மதிவேந்தன்
எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு போன்ற சீனியர் அமைச்சர்களும், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்ற கட்சி சீனியர்களும் மட்டுமே இன்று உட்பட ஆண்டுதோறும் அந்த இடத்தை ஆக்கிரமிப்பார்கள். இதனிடையே ஜூனியர் அமைச்சரான மதிவேந்தன் இன்று முதல்வருடன் ஒன்றாக சில மணி நேரங்கள் மேடையில் நின்றது தான் சக அமைச்சர்கள் மத்தியிலேயே பேசு பொருளாக உள்ளது.

அமைச்சர் எவ வேலு
அமைச்சர்கள் எவ வேலு மதிவேந்தனை தட்டிக்கொடுத்து மேடையில் தனது அருகில் நிறுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மதிவேந்தனின் செயல்பாடுகள் இல்லாவிட்டாலும் கூட இப்போது படிபடியாக ஸ்டாலினிடமும், உதயநிதி ஸ்டாலினிடமும் ஸ்கோர் செய்து வருகிறார்.

வனத்துறை மாற்றம்
அமைச்சரவைக்கு புதியவரான மதிவேந்தனுக்கு ஆரம்பத்தில் சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டிருந்தது. படிபடியாக அமைச்சரவை செயல்பாடு பற்றிக் கற்றுக்கொண்ட இவர் இப்போது வனத்துறையில் தனது நடவடிக்கைகள் மூலம் மெல்ல ஸ்கோர் செய்து வருகிறார். குறிப்பாக முதல்வர் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூற வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் திமுகவினர் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறார்.
-
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications