Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியாழன், சனி கோள்களின் கூட்டணி : வான வேடிக்கையை இன்று இரவு கண்டு ரசிக்கலாம்

வானத்தில் இன்று நிகழும் அதிசய நிகழ்வான வியாழன், சனி கோள்களின் இணைவை கண்டு ரசிக்கலாம். மாலை 6.30 மணிக்கு தென்மேற்கு திசையில் வியாழன், சனி ஆகிய 2 கோள்களும் ஒன்றையொன்று கட்டித் தழுவிக்கொள்வது போல காட்சியளிக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானத்தில் ஒரு அற்புத நிகழ்வு இன்று நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப் போகின்றன. சூரியன் மறைந்த பிறகு மாலை 6.30 மணிக்கு தென்மேற்கு திசையில் வியாழன், சனி ஆகிய 2 கோள்களும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருப்பது போல காட்சியளிக்கும் அரிய நிகழ்வை இன்று கண்டு ரசிக்கலாம்.

Recommended Video

    1623ம் ஆண்டுக்கு பிறகு வானியல் அதிசயம்.. ஒரே நேர்க்கோட்டில்… வியாழனும், சனியும்..!

    வானவீதியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களாக சூரியன், சந்திரன், பூமி, செவ்வாய், புதன், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் உள்ளன என்று படித்திருக்கிறோம். சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் வியாழன். இது நமது கண்களுக்கு அவ்வப்போது தென்படும்.

    Jupiter, Saturns Conjuction : Enjoy the sky in tonight

    சூரியனை சுற்றியுள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் நேர் கோட்டில் வருகின்றன. அவ்வாறு வரும்போது நாம் பூமியில் இருந்து பார்த்தால் அவை ஒரே நட்சத்திரம் போல தெரியும். அப்போது அவை மிகப்பிரகாசமாக தோன்றும். இதேபோன்ற ஒரு நிகழ்வு இன்று வானத்தில் நடக்கப்போகிறது.

    சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 14 கோடியே 72 லட்சம் கிலோ மீட்டர். இதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை போல 5 மடங்கு தூரத்தில் வியாழன் கிரகமும், 7 மடங்கு தூரத்தில் சனி கிரகமும் இருக்கின்றன. வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன.

    Jupiter, Saturns Conjuction : Enjoy the sky in tonight

    ஜோதிடத்தில் சனி கோளுக்கு மந்தன் என்ற பெயர் உள்ளது. அது போல சனி கிரகம் மெதுவாக நகரும். இது சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு சுற்றி வரும் வியாழனும், சனியும் இன்று ஒரே நேர்கோட்டில் சந்திக்கப் போகின்றன. அப்போது மிகப்பெரிய ஒளிப்பிரவாகம் வானத்தில் தோன்றக்கூடும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வான வேடிக்கையை இன்று அனைவரும் கண்டு ரசிக்கலாம்.

    இன்றைய தினம் மாலையில் சூரியன் மறைந்து அரை மணிநேரத்தில் இந்த இரு கோள்களும் ஒன்றாக தெரிவதை காணலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.30 மணிக்கு தென்படும். 30 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை நமது பார்வைக்கு நன்றாகத் தெரியும். அதன் பிறகு மறைந்துவிடும். இந்த காட்சி வானத்தில் தென்மேற்கே அரை கோளத்துக்கு கீழே அடிபகுதியில் தென்படும்.

    இப்போது இரு கோள்களும் ஒன்றாக இருப்பதை வெறும் கண்ணால் பார்த்தால் அப்போது நமக்கு சிறிதுகூட இடைவெளி தென்படாது. இரண்டுமே ஒரே நட்சத்திரம் என்பது போல இணைந்திருக்கும். இவற்றை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்தால் இரு கோள்களும் நூல் இழை அளவுக்கு இடைவெளி விட்டிருப்பதை பார்க்க முடியும். பூமியில் இருந்து வியாழன் அருகில் இருப்பதால் அது பிரகாசமாகவும், சனி தூரத்தில் இருப்பதால் சற்று மங்கலாகவும் இருக்கும்.

    Jupiter, Saturns Conjuction : Enjoy the sky in tonight

    வியாழனும் சனியும் இரு கோள்களும் நேற்றே சற்று நெருங்கிய நிலையில் காணப்பட்டன. ஆனால், இன்றுதான் மிக நெருக்கமாக வருகின்றன. இதை வெறும் கண்களால் பார்க்கும்போது இரு கோள்களும் இடித்துக்கொண்டு இருப்பது போல தோன்றும்.
    22, 23 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் 2 கோள்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதையும் காண முடியும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+