ஜஸ்ட் 18 லட்சத்தில் 2 கிலோ தங்கப் புதையல்.. சபலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்.. அதிர்ச்சி பின்னணி
சென்னை: அரிய வகை பழங்கால புதையல் ஒன்று எதிர்பாராத விதமாக அகப்பட்டுள்ளதாக பரவிய தகவல், பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. பூமியில் புதைந்து கிடந்த இந்த பொக்கிஷத்தை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி வந்த ஆசை வார்த்தைகள், இப்போது ஒரு பெரிய விபரீதத்தில் முடிந்துள்ளது.. கண்ணைக் கவரும் இந்த புதையல் கதையின் பின்னணியில் மறைந்திருக்கும் அதிர்ச்சி தகவல்களும் இப்போது வெளியாகி உள்ளன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது முத்துராமலிங்கம்.. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

தங்க நகைகள் கிலோ கணக்கில்
இவருடைய நண்பரான ராஜ்குமாருக்கு, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.. ஒருநாள் ராஜ்குமாரிடம் பேசும்போது, "நான் பொக்லைன் மிஷின் ஓட்டிட்டு இருந்தேன்.. அப்போது 2 கிலோ எடையுள்ள தங்க புதையல் கிடைத்தது.. அவ்வளவு தங்க நகைகளை என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எங்கே போய் விற்பது என்றும் தெரியவில்லை.. எனவே அந்த தங்க புதையலை விற்க ஆள் தேவை" என்று சொல்லி உள்ளார்..
இதைக்கேட்டதுமே ராஜ்குமாருக்கு சபலம் துளிர்த்துது.. உடனே இந்த விஷயத்தை தனது மற்றொரு நண்பரான சேது முத்துராமலிங்கத்திடம் பகிர்ந்துள்ளார்.. குறைந்த விலையில் அதிக தங்கம் கிடைக்கிறது என்ற பேராசையில், சேது முத்துராமலிங்கம் அந்த நகைகளை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார்..

2 கிலோ தங்கப் புதையல்
இது குறித்து அசோக்கிடம் பேசியபோது, நேரில் வந்து நகையை சரிபார்த்துக்கொள்ளுமாறு, நண்பர்கள் 2 பேருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.. இதனைத் தொடர்ந்து, கடந்த 12ம் தேதி சேது முத்துராமலிங்கம் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கிருஷ்ணகிரிக்குச் சென்று அசோக்கை நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அசோக் ஒரு கிராம் எடையுள்ள தங்க நகையை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
அந்த தங்க புதையலை வாங்கி காரைக்குடிக்குச் சென்று சேது முத்துராமலிங்கம் சரிபார்த்துள்ளார்.. அது 80 சதவீதம் உண்மையான தங்கம் என உறுதியாகியுள்ளது.. இதனால் இருவருக்குமே அசோக் மீது முழுமையான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நகை பட்டறை பணியாளர்கள்
சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க நகைகளை, வெறும் 18 லட்சம் ரூபாய்க்கு தருவதாக அசோக் பேரம் பேசியுள்ளார்.. பணத்திற்கு ஆசைப்பட்டு, சேது முத்துராமலிங்கம் 18 லட்சம் ரூபாயை தயார் செய்துகொண்டு, தனது நண்பர் ராஜ்குமார் மற்றும் நகை பட்டறை பணியாளர் ஆறுமுகம் ஆகியோருடன் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதிக்குச் சென்றுள்ளார்..
அங்கு அசோக்கை சந்தித்த போது, 2 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அவரிடமிருந்து பெற்றுள்ளனர்.. அப்போது நகை பட்டறை பணியாளர் ஆறுமுகம் அந்த நகைகளை சோதிக்க முயன்றுள்ளார்.. இதனால் பதறிப்போன அசோக், "வேண்டாம், போலீசார் வந்துவிடுவார்கள்" என்று சொல்லி, அவர்களை அவசரமாக அங்கிருந்து கிளம்ப சொல்லியுள்ளார்.

செம்பு முலாம் தங்கம் - சிக்கிய கும்பல்
இதனால் அவசரத்திலும் பதற்றத்திலும் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.. காரைக்குடி திரும்பிய சேது முத்துராமலிங்கம், வாங்கிய நகைகளை முழுமையாக சோதித்து பார்த்துள்ளார்.. அப்போதுதான் அவை அனைத்துமே செம்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சேது முத்துராமலிங்கம், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், ஓசூர் பாகலூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்..
இந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அனுமன் தீர்த்தம் பகுதியைச் சேர்ந்த அசோக், கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூரைச் சேர்ந்த பிரசாத் மற்றும் பிரபு ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. அவர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்து சிறையிலும் அடைத்துள்ளனர்.. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications