கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் 3 நாள்தான் இருக்கும்.. ரூ.1000 பெறுவதற்கு தங்கமான வாய்ப்பு!
சென்னை: கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் அவகாசம் மட்டுமே உள்ளது. இந்த வாய்ப்பை விட்டால்.. இனி குறைந்தது 2-3 வருடங்களுக்கு புதிய பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் குறைவு.
'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களைப் பெறுவதே இந்த முகாம்களின் முக்கிய நோக்கம். இம்முகாம்கள் இன்னும் மூன்று நாட்களில் நிறைவடைய உள்ளன.
கலைஞர் உரிமை தொகை
இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, சுமார் பத்து நிமிடங்களுக்குள்ளேயே அனைத்துப் பணிகளும் முடிக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் இம்முகாம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவை. வேறு எந்தக் கூடுதல் ஆவணங்களும் கோரப்படுவதில்லை.
மகளிர் உரிமைத் தொகைக்குத் தகுதியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை கட்டாயம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம்கள்
நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் கடந்த ஒரு மாதமாகப் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களும் படிப்படியாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் மனுவின் நிலையை https://kmut.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் அறிந்துகொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பாகக் கருதப்படுகிறது. நவம்பர் 15ஆம் தேதி வரை மட்டுமே இந்த முகாம்கள் நடைபெற உள்ளன. அதன் பிறகு முகாம்கள் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
இதுவே கடைசி வாய்ப்பு
விடுபட்டோர் அனைவருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், கடும் பொருட்செலவிலும் கூட இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் மூலம் இதுவரை 44 லட்சம் பெண்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இந்த முகாம்களில் பெறப்படும் என முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்ய வருவாய் துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு வருவதாக துணை முதல்வர் தெரிவித்தார். நவம்பர் வரை இத்திட்டம் நடைபெறுகிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 73 ஆயிரம் பெண்கள் இத்திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications