வெறும் 100 ரூபாய் முதலீடு.. கைநிறைய 2 லட்சம் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ்.. மக்களுக்கு பிக் சர்ப்ரைஸ்
சென்னை: இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வு மற்றும் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.. ஆனால் எங்கே சேமித்தால் நமது பணம் பாதுகாப்பாக இருக்கும், எதில் அதிக வட்டி கிடைக்கும் என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு.. குறிப்பாக நடுதர மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை எந்தவித ஆபத்தும் இல்லாமல் லாபகரமாக மாற்ற தபால் நிலையங்கள் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கின்றன.. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த தொடர் வைப்பு நிதி எனப்படும் ஆர்.டி திட்டம்.. இந்தத் திட்டம் குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இந்த ஆர்.டி திட்டத்தின் மிகப்பெரிய ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், இதில் சேருவதற்கு உங்களிடம் பெரிய தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. ஒரு சாதாரண கூலி வேலை செய்பவர் கூட தினமும் 100 ரூபாய் என ஒதுக்கி, மாதத்திற்கு 3,000 ரூபாய் என்ற கணக்கில் சேமிப்பைத் தொடங்க முடியும்..

தபால் நிலையம் சேமிப்பு
நாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கும் சிறு தொகை ஒருநாள் மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கும் என்பதற்கு இந்தத் திட்டமே சாட்சி. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையால் இது நடத்தப்படுவதால், உங்கள் பணத்திற்கு நூறு சதவீதம் பாதுகாப்பு உண்டு.. தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு பயப்படுவதை விட, தபால் நிலையத்தில் பணத்தைப் போடுவது நிம்மதியான விஷயம்.
வருமானத்தை பொறுத்தவரை, இப்போது தபால் நிலையம் இந்த திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டியை வாரி வழங்குகிறது.. உதாரணமாக நீங்கள் மாதம் 3,000 ரூபாய் வீதம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. 5 வருஷத்தில் நீங்கள் உங்கள் உழைப்பில் இருந்து கட்டிய மொத்தத் தொகை 1,80,000 ரூபாயாக இருக்கும்.. இந்த தொகைக்கு தபால் நிலையம் அளிக்கும் வட்டி மட்டும் 34,097 ரூபாய் ஆகும்..
முதிர்வுத் தொகை
ஆக மொத்தம் 5 வருஷம் முடிந்து உங்கள் கணக்கு முதிர்வடையும் போது, உங்கள் கைக்கு 2,14,097 ரூபாய் மிகச்சரியாக வந்து சேரும்.. நாம் சேமிக்கிறோம் என்பதே தெரியாமல் மாதம் மாதம் ஒதுக்கும் சிறு தொகை, ஐந்து வருடம் கழித்து இரண்டு லட்சத்திற்கும் மேலாக கையில் கிடைக்கும்போது அது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்..
இந்த திட்டத்தில் சில நெகிழ்வுத்தன்மைகளும் உள்ளன.. உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், நீங்கள் கட்டிய தொகையில் பாதியை கடனாக பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு.. மேலும் கணக்கை தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு இந்த கடனைப் பெறலாம்..
ஒருவேளை உங்களால் தொடர்ந்து கட்ட முடியாவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முடித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு.. ஆனால் முழு வட்டிப் பலனை அடைய ஐந்து ஆண்டுகள் வரை காத்திருப்பதுதான் புத்திசாலித்தனம்.. பங்குச்சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வட்டி மாறாது என்பதால், முதலீடு செய்த அன்றே உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது தெரிந்துவிடும்..
கனவை நனவாக்கும் ஏணி
நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு செலவு, திருமணச் செலவு அல்லது சொந்தமாக இடம் வாங்குவது போன்ற கனவுகளை நனவாக்க இந்த ஆர்.டி திட்டம் ஒரு ஏணியாக இருக்கும்.
பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணம் நஷ்டமாக வாய்ப்பு உண்டு, ஆனால் தபால் நிலைய ஆர்.டி திட்டத்தில் அந்தப் பயம் தேவையே இல்லை.. லாபமும் பாதுகாப்பும் ஒருசேரக் கிடைக்கும் இந்தத் திட்டத்தில் இணைந்து உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளலாம்.. வெறும் 100 ரூபாயில் தொடங்கும் உங்கள் சேமிப்புப் பயணம், உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக மாறும் என்பதில் துளியும் சந்தேகமில்லை..!!!












Click it and Unblock the Notifications