நீட் தேர்வு பாதிப்பு- முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி ஏ.கே. ராஜன் குழு 165பக்க அறிக்கை தாக்கல் செய்தது!
சென்னை: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
Recommended Video
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் மொத்தம் 9 பேர் இடம் பெற்றனர். நீட் தேர்வுக்குப் பின்னர் மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்கள் சேர்க்கை எப்படி வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறித்து இக்குழு ஆராய்ந்தது.

ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு
அத்துடன் பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு பெற்றது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

ஹைகோர்ட் விளாசல்
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நீட் தேர்வு பாதிப்புக்கான குழுவை தமிழக அரசு அமைத்தது செல்லும்; வெறும் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என கூறி கரு. நாகராஜன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி ராஜன் குழு அறிக்கை
இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சந்தித்தது. இந்த சந்திப்பின் போது தமது குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார் நீதிபதி ஏ.கே. ராஜன். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

பரிந்துரை மீது எதிர்பார்ப்பு
கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றதை முன்னுதாரணமாக காட்டியே உச்சநீதிமன்றத்தில் வாதாடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே பொது மேடைகளில் நீதிபதி ஏ.கே. ராஜன் வலியுறுத்தி இருந்தார். இதனால் நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினிடன் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே. ராஜன், மொத்தம் 165 பக்க அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். சுமார் 85,000 பேரிடம் கருத்து கேட்டுள்ளோம். பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர் இந்த ஆண்டு நடத்தலாம்; 2 ஆண்டுகள் மட்டும் நடத்தலாம் எனவும் கூறி உள்ளனர். இவை அனைத்தும் நாங்கள் தாக்கல் செய்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ளது. எங்கள் குழுவின் பரிந்துரை விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் விவரிப்பார் என்றார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications