திமுக அமைச்சர்களை.. அதிர வைத்த நீதிபதியின் "மீன் கவிதை".. சொன்ன ஒரு வார்த்தை.. ஒரே படபடப்பு!
சென்னை: ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகளில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீதிபதி வெங்கடேஷ், பிரபல ஐரிஷ்-அமெரிக்கக் கவிஞர் ஜேம்ஸ் ஜெஃப்ரி ரோச்சியை மேற்கோள் காட்டினார்.
ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர தொடங்கி உள்ளன. அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்குகள் பிப்ரவரி மாதம் முழுக்க விசாரணை செய்யப்பட்டது.

சுமோட்டோ வழக்கு: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டு இருந்த நிலையில், அந்த வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் அவர்களை விடுவித்தன.
இந்த உத்தரவுகளைத் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். ஆனாலும், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு சுப்ரீட் கோர்ட் தடை விதிக்க மறுத்த நிலையில்தான் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இதில் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டார் . வழக்குகளில் அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து, இந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு அளித்த நீதிபதி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்தது தவறானது அதை ரத்து செய்கிறேன். வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். அடுத்த மாதம் 9 ம் தேதி இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்
நீதிபதி தீர்ப்பு: நீதிபதி தனது தீர்ப்பில், மற்ற மாநிலங்களில் இதுபோன்ற குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு இந்த வழக்கு ஒரு உத்வேகமாக மாறாமல் இருக்க வேண்டும். இந்த நீதிமன்றம் இந்த வழக்கை இரும்புக் கரம் கொண்டு கையாளும். இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் நீதியின் பக்கம் இருப்பதை உறுதி செய்ய விழிப்புடன் இருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களும் வழக்குத் தொடுத்தவர்களும் இந்த வழக்கில் கைகோர்த்து செயல்பட்டு உள்ளார்.
இது மற்ற மாநிலங்களில் இதுபோன்ற குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி விடக்கூடாது. அதனால்தான் இதில் நீதிமன்றம் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கிறது. இதில் லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு மாதிரி செயல்பட்டு உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்தில் இல்லாத போது வழக்கு ஒரு திசையில் சென்று உள்ளது. அமைச்சர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் வழக்கு வேறு ஒரு திசைக்கு சென்றுள்ளது.
இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சி என்றால் சமமாக இருக்க வேண்டும். இந்த மாநிலத்தின் அரசியல்வாதிகளும், சாமானியர்களும் நீதிமன்றத்தின் முன் சமமாக இருப்பார்கள். கசாப்புக் கடைக்காரன், கொல்லன், மெழுகுவர்த்தி செய்பவன், வருமானம், வீட்டுவசதி, நிதி அமைச்சர்கள் வரை எல்லோரும் நீதிமன்றம் முன் சமம்தான், என்று நீதிபதி குறிப்பிட்டார்.
இரண்டு தீர்ப்புகளையும் முடிப்பதற்கு முன், நீதிபதி வெங்கடேஷ், பிரபல ஐரிஷ்-அமெரிக்கக் கவிஞர் ஜேம்ஸ் ஜெஃப்ரி ரோச்சியை மேற்கோள் காட்டினார்:
அதில் "The net of law is spread so wide,
No sinner from its sweep may hide.
Its meshes are so fine and strong,
They take in every child of wrong.
O wonderous web of mystery!
Big fish alone escape from thee!
என்று கூறினார். அதாவது "சட்டம் என்பது வலை போன்றது.. அது மிகவும் பரந்து விரிந்துள்ளது, அதன் வலை பின்னலில் இருந்து எந்தப் பாவியும் தப்பிவிட முடியாது. அதன் பின்னல்கள் மிகவும் நன்றாகவும் வலுவாகவும் உள்ளன, அது தப்பு செய்யும் ஒருவரையும் விடாமல் பிடித்துக்கொள்ளும்.. ஓ அதிசய வலையே! ஆனால் ஒரு பெரிய மீன் மட்டும் உன்னிடம் இருந்து தப்பிக்கிறது.. என்ற பொருள் கொண்ட கவிதையை அவர் வாசித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications