“தப்பு மேல தப்பு”! ஆளுநர் அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்கக்கூடாது: நீதியரசர் சந்துரு சொன்ன பாயிண்ட்!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் "தவறு மேல் தவறு" செய்து வருவதாக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஒரு அமைச்சரை முதல்வரின் பரிந்துரையின்றி பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த அதிகாரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். அவர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரிடம் இருந்த மின்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடமும் ஒப்படைக்கப்பட்டன.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர்: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஏற்காத ஆளுநர், அமைச்சரவையில் இருந்து அவரை நீக்கி கடந்த 29-ஆம் தேதி உத்தரவிட்டார். சில மணி நேரங்களில் இந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க இருப்பதால் பதவி நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே ஆளுநருக்கு, அமைச்சரவையில் இருந்து அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரும், திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு நீதியரசர்கள் கே.சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்துப் பேட்டி அளித்துள்ளனர்.
அதிகாரம் இல்லை: முதலமைச்சரின் பரிந்துரை இன்றி ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் அதிகாரம் அளிக்கவில்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார். "இது போன்ற பிரச்சினைகளில் ஆளுநர் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பது அடிப்படையானது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரே முதலமைச்சரை நியமிப்பார் என்றும் மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறும் அரசியலமைப்புச் சட்டத்தின் 164(1) வது பிரிவு, பிரதமரை நியமிக்கும் குடியரசுத் தலைவர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கும் சட்டப்பிரிவு 75(1) போன்றது என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.
சட்டப்பிரிவு 75(1)க்கு விளக்கம் அளிக்கும் போது, மனோஜ் நருலா vs இந்திய அரசு (2014) வழக்கில் உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கையை எதிர்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்பதை தடை செய்யும் தகுதி நீக்கத்தை சேர்க்க மறுத்துவிட்டது. ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அவரிடமிருந்து அரசியலமைப்பு எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவெடுடுப்பதை பிரதமரின் அதிகாரத்திற்கே விட்டுவிட்டது.
நீதிபதி சந்துரு: இந்த தீர்ப்பு ஆகஸ்ட் 27, 2014 அன்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதி (CJI) ஆர்.எம். லோதா மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மதன் பி. லோகூர், குரியன் ஜோசப் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோரால் வெளியிடப்பட்டது. நீதிபதி மிஸ்ரா தனக்காகவும், தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி போட் ஆகியோருக்காகவும் தீர்ப்பை எழுதினார். நீதிபதிகள் லோகூர் மற்றும் ஜோசப் பெரும்பான்மையுடன் ஒத்துப்போவதற்கு தனிப்பட்ட காரணங்களைத் தெரிவித்தனர்.
அந்தத் தீர்ப்பில், நீதிபதி மிஸ்ரா, "இந்த விஷயத்தில் பிரதமருக்கு நாங்கள் அறிவுறுத்தியதைச் சேர்க்க வேண்டும், இது முதல்வர்களுக்கும் பொருந்தும், இது அரசியலமைப்புச் சட்டத்தின் 164 (1) இல் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிக்கும் பொருந்தும்." எனக் குறிப்பிட்டார். எனவே, முதல்வரைத் தவிர வேறு யாரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களை முடிவு செய்ய முடியாது என்பதுதான் இன்றைய சட்டமாகும் என்றார் நீதியரசர் கே.சந்துரு.
இரண்டாவது தவறு: ஆளுநர் தனது பதவி நீக்க உத்தரவை கிடப்பில் போட்டது குறித்தும், மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் அட்டர்னி ஜெனரலிடம் கருத்து கேட்க முடிவு செய்தது குறித்தும் பேசியுள்ள முன்னாள் நீதிபதி கே.சந்துரு, "இது ஆளுநர் செய்த இரண்டாவது தவறு. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பதால், அவர் அட்வகேட் ஜெனரலிடம் மட்டுமே கருத்து கேட்க முடியும், அட்டர்னி ஜெனரலிடம் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஹரிபரந்தாமன்: முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. ஹரிபரந்தாமனும் இதே கருத்தை வழிமொழிந்துள்ளார். அரசியல் சாசனத்தின் 191வது பிரிவு, ஒரு எம்.எல்.ஏ.வை தகுதி நீக்கம் செய்ய ஐந்து தற்செயல் நிகழ்வுகளில் மட்டுமே வழங்குகிறது, இதில் லாபம் பெறும் பதவியில் நீடித்தல், மனநிலை சரியில்லாதவர் குடியுரிமை பறிபோகும் நிலை மற்றும் ஏத்ஒரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்படுதல் ஆகிய விஷயங்கள் இதில் அடங்கும்.
1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அத்தகைய தகுதி நீக்கத்தை வழங்கும் ஒரே மத்திய சட்டம் ஆகும், இது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்று கூறுகிறது. இந்த நிகழ்வுகளைத் தவிர, ஒரு அமைச்சரை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மட்டுமே அவர் குற்றவாளி என்று கருத முடியாது என்றும், நிலுவையில் உள்ள ஒரு வழக்கை, ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான காரணமாக ஆளுநரால் குறிப்பிட முடியாது என்றும் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்
-
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி











Click it and Unblock the Notifications