தமிழகத்தின் பாரம்பரியத்தை காப்பேன்.. சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரியத்தை உறுதி செய்வதாக புதிய தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே ஆர் ஸ்ரீராமுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், கடந்த 1981 ஆம் ஆண்டு தமிழ் பேசத் தெரிந்த எம் எம் இஸ்மாயிலை தலைமை நீதிபதியாக பெற்றதாகவும், 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் பேசத் தெரிந்த தலைமை நீதிபதியை பெற்றுள்ளதாகவும், நீதிபதி பரிபாலனத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
பின்னர் தமிழில் ஏற்பரையை துவங்கிய தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம், தமிழ் தாய்க்கு முதல் வணக்கம் சகோதர சகோதரிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் எனவும், பள்ளியில் தமிழ் படித்திருந்ததாகவும் 500-க்கும் மேற்பட்ட திருக்குறள்கள் மனப்பாடம் செய்த இந்த நிலையில் இன்று கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குரல் மட்டுமே நினைவிருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரம்பரியம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய இது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என தெரிவித்த தலைமை நீதிபதி நீதிமன்றம் சுமூகமாக இயங்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு, நடுநிலைமை அதிகாரத்தில் இருந்து, சமன் செய்து சீர்தூக்கி... சொற்கோட்டம் ஆகிய இரண்டு திருக்குறள்களை மேற்கோள் காட்டி நன்றி தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications