சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம்! யார் இவர்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்த கே.ஆர். ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர்.

யார் இந்த எம்.எம். ஸ்ரீவஸ்தவா?
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். சத்தீஷ்கரின் பிலஸ்பூரை சேர்ந்த இவருக்கு தற்போது 61 வயது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர் அங்குள்ள நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
தலைமை நீதிபதிகள் மாற்றம்
சென்னை, ராஜஸ்தான் தவிர மத்திய பிரதேசம், கர்நாடகா, கவுஹாத்தி, பாட்னா, ஜார்காண்ட், திரிபுரா, தெலங்கானா உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சீவ் சச்தேவா அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள விபு பக்ரு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாட்னா ஐகோர்ட்
பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள விபுல் மனுபாய் பஞ்சோலி அதே நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள அசுதோஷ் குமார் கவுகாத்தி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள தர்லோக் சிங் சவுகான் ஜார்கண்ட் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அபரேஷ்குமார் சிங், தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எஸ். ராமச்சந்திர ராவ், திரிபுரா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த், ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications